ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ (Art Institute of Chicago) என்பது ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்துள்ள கலைக்களஞ்சிய அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் மிகப்பிரம்மாண்டமான மூன்று கட்டடங்களில் இயங்குகிறது. இம்மூன்று கட்டடங்களும் முதல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ
அருங்காட்சியகத்தின் முதன்மை நுழைவாயிலில் உள்ள இரு சிங்கங்களின் சிலைகள்(Kemeys, bronze 1893)
Map
நிறுவப்பட்டது1879; தற்போது உள்ள இடத்தில் 1893இல் இருந்து
அமைவிடம்111 தெற்கு மிச்சலின் அவென்யூ (சிகாகோ)
சிகாகோ, இல்லினாய்ஸ் 60603
சிகாகோ, IL 60603
USA
வருனர்களின் எண்ணிக்கை1,846,889 (2009)[1]
இயக்குனர்Douglas Druick
பொது போக்குவரத்து அணுகல்CTA Bus routes:
(6 and 28 line)

'L' and Subway stations:

Adams-Wabash:
 
Brown Line
 
Green Line
 
Orange Line
 
Pink Line
 
Purple Line

Monroe:
 
Red Line

Jackson-Dearborn(at Dearborn Street):
 
Blue Line

Metra Train:
Van Buren Street Station
வலைத்தளம்www.artic.edu

கீழ்தளம்

தொகு

கீழ் தளத்தில் ஓய்வறைகள், தொலைபேசியகம், குடிநீர் குழாய்கள், ஒளிப்படக் காட்சியறை, கட்டடக்கலைக் காட்சியறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கே அருங்காட்சியக விற்பனைப் பிரிவும் செயல்படுகிறது. அதில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களின் நகல்கள் வெவ்வேறு அளவுகளிலும், ஓவியங்கள் அடங்கிய நூல்கள் போன்றவை கிடைக்கின்றன. மேலும் இக்கீழ்தளத்தில் அதற்கென தனியாக உள்ள அரங்கில் அவ்வப்போது உலகின் பல பாகங்களில் இருந்து சிறப்புக் கண்காட்சிகளும் நடக்கின்றன.[2]

முதல் தளம்

தொகு

முதல் தளத்தில் ஜப்பானிய, சீன, கொரிய கலைப்படைப்புகளும், நவீன சமகால ஓவிங்களும், போர்க்கருவிகளும், ஐரோப்பிய அலங்கார கலைப்பொருட்களும், ஆப்பிரிக்க, பழைய அமெரிக்க கலைப்படைப்புகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது தளம்

தொகு

இரண்டாவது தளத்தில் நவீன மற்றும் சமகால அமெரிக்க ஐரோப்பிய ஓவியங்களும், சிற்பங்களும், இம்ப்ரசனிச, போஸ்ட் இம்ரசனிச ஓவியங்களும் 1400 இல் இருந்து 1900 வரையிலான ஐரோப்பிய ஓவியங்களும், சிற்பங்களும், கட்டடக்கலை பற்றிய ஒரு பிரிவும் அதில் உள்ளன. கிளவுட் மேனட், பால் செசானோ, டச்சு ஓவியர் வின்செண்ட் வான்கா, நார்வே ஓவியர் எட்வர்ட் மங்க், ஸ்பானிய ஓவியர்கள் பப்லோ பிக்காசோ, பிரான்சிஸ் கோயா, பிரஞ்சு ஓவியர்கள் ஹென்றி மாத்யூஸ், பால் காகைன், ஜார்ஜ் பிராக், விளாமிங், மேரிகிராட், எடவர்ட் டீகாஸ், எட்வர்ட் மேனட், சூரட் போன்றோருடைய ஓவியங்களும், பிளமிய ஓவியர்களான பீட்டர்பால் ரூபன்சின் ஓவிங்களும், பிரித்தானிய ஓவியர்களான ஜான் கான்ஸ்டபில், டர்னர் போன்ற பல்வேறு ஓவியர்களின் ஒவியங்கள் இங்கு காணப்படுகின்றன.[3]

ஒவியங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Exhibition and museum attendance figures 2009" (PDF). London: The Art Newspaper. April 2010. Archived from the original (PDF) on 1 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 May 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |= ignored (help)
  2. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.27
  3. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.26

வெளி இணைப்புகள்

தொகு

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்