ஆர்த்தி ராமசாமி
ஆர்த்தி ராமசாமி (Aarthie Ramaswamy) என்பவர் ஓர் இந்திய பெண் சதுரங்க விளையாட்டு வீரராவார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு சூன் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். 2003 ஆம் ஆண்டில் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை ஆர்த்தி வென்றார். 1999 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் ஓரோபெசா நகரத்தில் நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 2211 எலோ தரப்புள்ளிகள் பெற்ற சதுரங்க வீரராக உள்ளார்.
ஆர்த்தி ராமசாமி Aarthie Ramaswamy | |
---|---|
முழுப் பெயர் | ஆர்த்தி ராமசாமி |
நாடு | இந்தியா |
பட்டம் | பெண்கள் கிராண்டு மாசுட்டர் (2003)[1] |
பிடே தரவுகோள் | 2211 (சனவரி 2010) |
உச்சத் தரவுகோள் | 2348 (ஏப்ரல் 2003) |
1990 ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கான பெண்கள் சதுரங்க விளையாட்டில் இரண்டாம் இடம் பிடித்தார். 1993 ஆம் ஆண்டு 12 வயதிற்குபட்டவர்களுக்கான விளையாட்டுப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். தனது அடுத்தடுத்த அதிரடியான நகர்வுகள் மூலம் 1995 ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்டோர் , 16 வயதிற்கு உட்பட்டோர் சாம்பியன் பட்டங்களை வென்றார். 1998, 1999 ஆம் ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் தேசியப் பட்டத்தை வென்றார்.[2]
இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆர்.பி. இரமேசை ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Title Applications: Ramaswamy, Aarthie
- ↑ Shah, Sagar (2018-11-22). ""You can be a cobbler if you want, but be the best cobbler in the world!"". ChessBase India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
புற இணைப்புகள்
தொகு- ஆர்த்தி ராமசாமி rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு