ஆர்த்தோ-குமாரிக் அமிலம்

ஆர்த்தோ-குமாரிக் அமிலம் (o-Coumaric acid) என்பது C9H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். சின்னமிக் அமிலத்தின் ஐதராக்சி வழிப்பொருளான இச்சேர்மம் ஒரு ஐதராக்சிசின்னமிக் அமிலமாகும். ஆர்த்தோ-குமாரிக் அமிலம், மெட்டா-குமாரிக் அமிலம், பாரா-குமாரிக் அமிலம் என்று மூன்று வகையான மாற்றியன்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பீனைல் தொகுதியில் பதிலீடு செய்யப்பட்டுள்ள ஐதராக்சி குழுவின் இடவமைப்பைப் பொறுத்து வேறுபடுகின்றன. வினிகரில் ஆர்த்தோ-குமாரிக் அமிலம் காணப்படுகிறது.

ஆர்த்தோ-குமாரிக் அமிலம்
o-Coumaric acid
Skeletal formula of o-coumaric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(E)-3-(2-ஐதராக்சிபீனைல்)புரோப்-2-யினோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
ஆர்த்தோ குமாரிக் அமிலம்
2-ஐதராக்சி சின்னமிக் அமிலம்
இனங்காட்டிகள்
614-60-8
ChEBI CHEBI:18125
ChemSpider 553146
InChI
  • InChI=1S/C9H8O3/c10-8-4-2-1-3-7(8)5-6-9(11)12/h1-6,10H,(H,11,12)/b6-5+
    Key: PMOWTIHVNWZYFI-AATRIKPKSA-N
  • InChI=1/C9H8O3/c10-8-4-2-1-3-7(8)5-6-9(11)12/h1-6,10H,(H,11,12)/b6-5+
    Key: PMOWTIHVNWZYFI-AATRIKPKBG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 637540
  • C1=CC=C(C(=C1)C=CC(=O)O)O
பண்புகள்
C9H8O3
வாய்ப்பாட்டு எடை 164.16 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3-(2-ஐதராக்சிபீனைல்)புரோப்பனேட்டு மற்றும் நிக்கோனிடமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ இவற்றிலிருந்து 2-குமாரேட்டு ரிடக்டேசு என்ற நொதி 2-குமாரேட்டை உருவாக்குகிறது. பீனைல் அலானின் வளர்சிதை மாற்றத்தில் இந்நொதி பங்கேற்கிறது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. Levy, Carl C.; Weinstein, Gerald D. (1964). "The Metabolism of Coumarin by a Microorganism. II. The Reduction of o-Coumaric Acid to Melilotic Acid". Biochemistry 3 (12): 1944–7. doi:10.1021/bi00900a027. பப்மெட்:14269315. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ-குமாரிக்_அமிலம்&oldid=2561468" இலிருந்து மீள்விக்கப்பட்டது