ஆர்னெத் கணக்கீடு
ஆர்னெத் கணக்கீடு (Arneth count) என்பது குருதி வெள்ளையணுக்களுள் ஒன்றான நடுவமைநாடிகளின் (நியூட்ரோஃபில்கள்) உட்கரு மடல்களின் (nuclear lobes) எண்ணிக்கையை கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கீடு ஆகும்.[1][2][3]
பொதுவாக நடுவமைநாடிகளின் உட்கருவில் இரண்டு அல்லது மூன்று மடல்கள் இருக்கும்.
நுண்ணோக்கி கொண்டு பார்க்கும் போது,
- குறைவான மடல் எண்ணிக்கை கொண்ட நடுவமைநாடிகள் (நியூட்ரோஃபில்கள்) பெரும்பான்மையாக இருப்பின் இது இடப்புற நகர்வு எனப்படும். தொற்று, புற்று, குருதிச் சிதைவு போன்ற நிலைகளில் இவ்வாறு காணப்படும்
- அதிக மடல் எண்ணிக்கை கொண்ட நடுவமைநாடிகள் (நியூட்ரோஃபில்கள்) இருக்குமாயின் இது வலப்புற நகர்வு எனப்படும். வைட்டமின் பி12 குறைபாடு, ஃபோலிக் அமிலக் குறைபாடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பில் இவ்வாறு காணப்படும். தற்கால மருத்துவத்தில் இக்கணக்கீடு அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Synd/252 at கூ நேம்ட் இட்?
- ↑ J. Arneth: Die neutrophilen weissen Blutkärperchen bei Infektions-Krankheiten. Habilitation paper, Jena 1903
- ↑ a g, N. (1931). "The Arneth Count". Canadian Medical Association Journal 24 (6): 841–843. பப்மெட்:20318343. பப்மெட் சென்ட்ரல்:382513. http://www.pubmedcentral.nih.gov/pagerender.fcgi?artid=382513&pageindex=1.