ஆர்மோனியா
ஆர்மோனியா (Harmonia, /hɑːrˈmoʊniə/; பண்டைக் கிரேக்கம்: Ἁρμονία), பண்டைய கிரேக்க இலக்கியங்களில் கூறப்படும் ஓர் இறவாத பெண் கடவுள் ஆவார். இவர் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இவருக்கு இணையான [[உரோம்|உரோமைக் கடவுள் கான்கோர்டியா. இவருக்கு எதிரான குணம் கொண்ட கிரேக்க கடவுள் ஏரிசு, (உரோமைக் கடவுள் இரிசு). இவருடைய உடன்பிறப்புகள் எரோசு, குபிட், பிலேகியாசு, ஆதிரெத்தியா, மற்றும் போபோசு, தெய்மோசு இரட்டையர்கள் ஆகியோராவர். இவரது பெற்றோர் அப்ரோடிட் (காதலின் கடவுள்), ஏரெசு (போரின் கடவுள்) ஆகியோராவர்.[1][2][3]
ஆர்மோனியாவின் அட்டிகை
தொகு"ஆர்மோனியாவின் சபிக்கப்பட்ட அட்டிகை" என்பது ஒரு புகழ்பெற்ற பழங்காலக் கதையாகும். சியுசு கடவுள் ஆர்மோனியவிற்கு கட்மசு என்பவரைத் தந்தார். அவர்கள் இருவரின் திருமணத்தன்று கடவுள்கள் அனைவரும் வந்து வாழ்த்தினர். அப்போது எப்பெசுடசு கடவுள் ஆர்மோனியாவிற்குக் கல்யாண பரிசாக ஒரு மேலங்கி மற்றும் அட்டிகை ஆகியவற்றைத் தந்தார். அந்த அட்டிகை ஆர்மோனியாவின் அட்டிகை என்று அழைக்கப்படுகிறது. அதை அணிந்த அனைவருக்கும் துரதிருஷ்டம் வந்தது. சில கதைகளில் ஆர்மோனியா அந்த அட்டிகையை அப்ரோடிட் அல்லது எராவிடம் இருந்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Scholia on ஓமர், இலியட் B, 494, p. 80, 43 ed. Bekk. as cited in Hellanicus of Lesbos' Boeotica
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Harmonia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 12. (1911). Cambridge University Press.
- ↑ Diodorus Siculus, 5.48.2