ஆர். அமரேந்திரன்

இந்திய நாடகத் திரைப்பட நடிகர்

ஆர். அமரேந்திரன் (R Amarendran) அமரேந்திரன் ரமணன் அல்லது ரமணன் என அழைக்கப்படும் இவர் இந்திய நாடகத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நாடகத்த் திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார். தனது கல்லூரிக் காலங்களில் இருந்து நடித்து வருகிறார். லயோலா கல்லூரி தயாரித்த கிரிஷ் கர்னாட் இயக்கிய துக்ளக்கில் இவர் பங்காற்றினார்.இதன்மூலம் மித்ரன் தேவனேசன் இயக்கிய கில்பர்ட் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். பின் சென்னையில் நடைபெற்ற சில நாடகத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் பிரஞ்சு அரசு பிரஞ்சு மொழி நாடகங்களில் நடிப்பதற்காக நான்கு இந்தியர்களைத் தேர்வு செய்தது. அதில் இவரும் ஒருவர் ஆவார். 1992 ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்து திரும்பிய பின் சுயமாக நாடகத் திரைப்படங்களை இயக்க திட்டமிட்டு அர்லெகின் எனும் திரையரங்கம் ஒன்றினைத் துவங்கினார். இவர் 25 நாடகங்களுக்கும் மேலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் நாடகங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் பலே பாண்டியா எனும் திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார்.

விடியும் முன் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதில் இவரின் நடிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது.[1][2][3] இந்தத் திரைப்படம் லண்டன் முதல் பிரிடன் வரை எனும் ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் ஆகும். மேலும் இவர் பல ஆஸ்கர் விருதுகளை வென்ற லைப் ஆஃப் பை எனும் திரைப்படத்தில் வரலாற்று ஆசிரியராக நடித்துள்ளார்.[4] இவர் சில நூல்களையும் எழுதியுள்ளார் இவருடைய முதல் குழந்தைகள் நூல் சிரியின் புன்னகை ஆகும். இந்த நூல் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இவர் சலீம் தெ நைஃப் அண்ட் தெ சார்ப்ணர் எனும் நூலினை எழுதியுள்ளார்.

ஜில் ஜங் ஜக், விடியும் முன் மற்றும் கபாலி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாடகங்கள் தொகு

டார்டஃப், தெ லெசன், தெ மெய்ட்ச், ஆகிய ஆங்கில நாடகங்களை இயக்கியுள்ளார். மேலும்துக்ளக் எனும் நாடகத்தில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தொகு

2010 தொகு

2010 ஆம் ஆண்டில் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பலே பாண்டியா திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் எனும் திரைப்படத்தில் ஞானி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

2012 தொகு

2012 இல் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளியாகி பல ஆஸ்கார் விருதுகளை வென்ற லைஃப் ஆஃப் பை எனும் திரைப்படத்தில் வரலாற்று ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

2013 தொகு

2013 ஆம் ஆண்டில் விடியும் முன் எனும் திரைப்படத்தில் சலூன் சிங்காரம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதில் இவரின் நடிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றது

2016 தொகு

2016 இல் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் திரைப்படத்தில் தெய்வநாயகம் கதாபாத்திரத்திலும், கபாலி திரைப்படத்தில் வேலு கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

2017 தொகு

சங்கிலி புங்கிலி கதவத் தொற திரைப்படத்தில் சிங்கப்பூர் சிங்காரம் எனும் கதாப்பாத்திரம் மற்றும் விக்ரம் வேதாவில் சங்கு எனும் கதாப்பாத்திரம் மற்றும் மாயவன் திரைப்படத்தில் பிரமோத் ஆகியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

2018 தொகு

ஆந்திரா மெஸ் திரைப்படத்தில் ஜனார்த்தனன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Vidiyum Munn (2013)". IMDb. 29 November 2013. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
  2. Baradwaj Rangan (2013-11-30). "Vidiyum Munn: In the mood for thrills". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-05-08.
  3. "Vidiyum Munn is brilliant - Rediff.com Movies". Rediff.com. 2013-11-30. பார்க்கப்பட்ட நாள் 2014-05-08.
  4. "Amarendran Ramanan". IMDb. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._அமரேந்திரன்&oldid=2598285" இலிருந்து மீள்விக்கப்பட்டது