ஆர். பார்த்தசாரதி

ஆர். பார்த்தசாரதி (R. Parthasarathy) [1] (பி.1934) ஓர் இந்தியக் கவிஞர்,[2] மொழிபெயர்ப்பாளர்,[3] விமர்சகர் மற்றும் ஆசிரியர் ஆவார்.[4]

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் தொகு

ராஜகோபால் பார்த்தசாரதி 20 ஆகஸ்டு 1934இல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தவர். டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும், மும்பை சித்தார்த் கல்லூரியிலும், ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அப்பல்கலைக்கழகத்தில் 1963–64இல் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆய்வாளராக இருந்தார்.[5]

பொறுப்புகள் தொகு

மும்பையில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் (Oxford University Press) சென்னை அலுவலகத்தில் மண்டல ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1978-ஆம் ஆண்டில் புதுதில்லிக்குச் சென்றார். ஆங்கிலம் மற்றும் ஆசிய ஆய்வுகளின் உதவிப்பேராசிரியராக அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்கிட்மோட் கல்லூரியில் சேர்ந்தார்.

அவர் 1968-ஆம் ஆண்டில் பொயட்ரி ஃப்ரம் லீட்ஸ்(Poetry from Leeds), 1977இல் ரஃப் பேசேஸ்(Rough Passage) ஆகியவற்றை எழுதினார். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தர்ல் வெளியிடப்பட்டது. ஒரு நீண்ட கவிதையை எழுதினார். அவருடைய இருபத்தோராம் நூற்றாண்டின் பத்து இந்தியக் கவிஞர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் 1976இல் பதிப்பிக்கப்பட்டு, 2002இல் 16ஆவது பதிப்பினைக் கண்டது. அவர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.[6] ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை நவீன ஆங்கிலக் கவிதை வடியில் (The Tale of the Anklet: An Epic of South India)[7] இது கொலம்பியா பல்கலைக்கழக அச்சகத்தால் 1993இல் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது (1995), மொழிபெர்ப்பிற்கான ஏ.கே.ராமானுஜன் விருது (1996)உள்ளிட்ட பல விருதுகளை அந்நூல் பெற்றது. பொயட்ரி இந்தியா (Poetry India) நூல் உல்கா கவிதை விருதினை 1966இல் பெற்றது. 1978-79இல் இயோவா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட எழுதுதல் திட்டத்தில் உறுப்பினராகச் செயலாற்றினார். சாகித்ய அகாதெமியில் ஆங்கிலப்பிரிவில் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.

பணிகள் தொகு

நூல்கள்

  • Rough Passage. (Poetry in English). புதுதில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், இந்தியா 1977. ISBN 0-19-560690-6
  • Poetry from Leeds. Leeds: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ஐக்கிய நாடுகள் 1968.

ஆசிரியர்

  • Ten Twentieth-Century Indian Poets. ( Chosen and Edited by R. Parthasarathy ). புதுதில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், இந்தியா 1977. ISBN 0-19-562402-5

மொழிபெயர்ப்புகள்

  • Cilappatikaram of Ilanko Atikal (The Tale of an Anklet): An Epic of South India. ( Translator – R. Parthasarathy ). நியூயார்க்: கொலம்பியா, அமெரிக்கா 1993.

சான்றாதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பார்த்தசாரதி&oldid=3797388" இருந்து மீள்விக்கப்பட்டது