ஆர். பாலச்சந்திரன்

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன் (சனவரி 13, 1946 - செப்டம்பர் 22, 2009, அகவை 63), கல்வியாளர், விமரிசகர், கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; சாகித்திய அகாதெமியின் நிர்வாக் குழு உறுப்பினராக இருந்தார். தமிழ் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராகவும் திகழ்ந்தார். "வானம்பாடி" என்ற தமிழ்ப் புதுக்கவிதைக் குழுவில் முக்கிய பங்காற்றியவர். சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு அவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும்.

ராமதாஸ் பாலச்சந்திரன்
பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன்
பிறப்பு(1946-01-13)சனவரி 13, 1946
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 22, 2009(2009-09-22) (அகவை 63)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
கல்விPhD (ஆங்கிலம்)
(பாரதிதாசன் பல்கலைக்கழகம், 1981)

MA (ஆங்கிலம்)
(ஸ்ரீ வெங்காடேஸ்வரா பக்லலைக்கழகம், 1975)

BA (வேதியியல்)
(அழகப்பா கல்லூரி, 1966)
பணிபேராசிரியர்
அறியப்படுவதுகல்வியாளர், கவிஞர், எழுத்தாளர்
பெற்றோர்மாணிக்கம் இராமதாஸ்
ஞானாம்பாள்
வாழ்க்கைத்
துணை
மஞ்சுளா
வலைத்தளம்
www.bala-ink.com

எழுத்துத் துறையில்

தொகு

கவிதை நூல்கள்

தொகு
  • இன்னொரு மனிதர்கள்
  • திண்ணைகளும் வரவேற்பறைகளும்
  • நினைவில் தப்பிய முகம்

உரைநடை நூல்கள்

தொகு
  • சர்ரியலிசம்
  • சிற்பியின் கவிதை வானம்
  • கவிதைப் பக்கம்
  • தமிழ் இலக்கிய விமர்சகர்கள்; 1979; சுவடு பதிப்பகம்
  • முன்னுரையும் பின்னுரையும்
  • புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை
  • பாரதி - தத்துவம் கலை இலக்கியம் மொழி
  • பாரதியும் கீட்சும்
  • Tamil Modern Poetry Bharathidasan and After
  • Literature and Society

கவிஞர்கள் மீரா, மு. மேத்தா, ராஜம் கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர சிறு பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார்.

மறைவு

தொகு

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பயனின்றி, 2009, செப்.22 மாலை 4 மணிக்கு காலமானார். பாலாவுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் பிரியா என்ற மகளும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்[1].

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பாலச்சந்திரன்&oldid=3431251" இலிருந்து மீள்விக்கப்பட்டது