ஆறாவது உலக பஞ்சாபி மாநாடு

ஆறாவது உலக பஞ்சாபி மாநாடு (6th World Punjabi Conference) பஞ்சாபின் கல்வி, மொழி, இலக்கியம், விவசாயம், பாதுகாப்பு மற்றும் அரசியல் தொடர்பாக குழு விவாத அடிப்படையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஒரு மாநாடு ஆகும். 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10,11 ஆகிய தேதிகளில் சண்டிகர் நகரில் நடைபெற்றது.[1] பஞ்சாபி மொழி மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பஞ்சாப் சட்டசபையின் அவைத் தலைவர் ராணா கன்வர் பால் சிங்கும் கலாச்சார விவகாரங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சர் நவ்சோதி சிங் சித்துவும் பங்கேற்றனர். பாட்டியாலாவிலுள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.எசு.குமான், நாம்தாரி சத்குரு உதய் சிங் மற்றும் உலக பஞ்சாபி மையத்தின் முன்னாள் இயக்குநர் தீபக் மன்மோகன் சிங் ஆகியோர் இம்மாநாட்டில் உரையாற்றினர். அனிதா சிங், இயங் பகதூர் கோயல், சுகி பாத் மற்றும் இக்பால் மகால் ஆகியோர் பஞ்சாபி மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டனர். மாநாடு ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் கலா பவனுக்கு மாறியது.[2]

டாக்டர் இராவெல் சிங் 6 ஆவது உலக பஞ்சாபி மாநாட்டில் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகிறார்

பஞ்சாபி பண்பாட்டு பாராளுமன்றத்தை உருவாக்குதல், பஞ்சாபி மொழி கடினமான காலங்களில் செல்ல நேரிட்டாலும் மொழியைக் காப்பாற்றுவது தொடர்பான கருத்துகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. பஞ்சாபில் உள்ள விளம்பரப் பலகைகளில் பஞ்சாபி மொழி இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றும் இந்த விவகாரத்தை குறித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிடம் எடுத்துரைப்பதாகவும் விழாவை தொடங்கி வைத்த அவைத்தலைவர் கூறினார். முக்கிய பஞ்சாபி எழுத்தாளர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படும் கலாச்சாரம் உருவாக வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

மேற்கோள்கள்

தொகு