பஞ்சாபி பல்கலைக்கழகம்
பஞ்சாபி பல்கலைக்கழகம் (Punjabi University) என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். எபிரேயப் பல்கலைக்கழகத்திற்கு அடுத்து உலகில் ஒரு மொழியின் பெயரால் வழங்கப்படும் இரண்டாவது பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது.[1] பஞ்சாபி மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பதையும் செறிவூட்டுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு பயிற்றுவித்தலுக்கும் ஆய்வுக்குமான பல்கலைக்கழகமாகத் தோற்றுவிக்கப்பட்டது.
ਪੰਜਾਬੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ (பஞ்சாபி) | |
குறிக்கோளுரை | ਵਿਦਿਆ ਵੀਚਾਰੀ ਤਾਂ ਪਰਉਪਕਾਰੀ |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Education Empowers கல்வி அதிகாரமளிக்கிறது |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் மாநிலப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1962 ஏப்ரல் 30 |
வேந்தர் | பன்வாரிலால் புரோகித், இந்திய பஞ்சாப் ஆளுநர்கள் |
துணை வேந்தர் | முனைவர். அர்விந்த் |
மாணவர்கள் | 14000 |
அமைவிடம் | , , 30°22′N 76°27′E / 30.36°N 76.45°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) (UGC), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NAAC), இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) |
இணையதளம் | www.punjabiuniversity.ac.in |
1961-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டம் எண் 35-இன் படி, இணைவுப் பல்கலைக்கழகமாக அல்லாமல் உறைவிட மற்றும் பயிற்றுவிப்புப் பல்கலைக்கழகமாக 1962 ஏப்ரல் 30-ஆம் நாள் நிறுவப்பட்டது. தொடங்கப்பட்ட காலத்தில் பரந்தாரி மாளிகைக் கட்டடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டுவந்த இப்பல்கலைக்கழகம், 1965-ஆம் ஆண்டு 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்துக்கு இடம்பெயர்ந்தது. 1969-ஆம் ஆண்டு பட்டியாலா, சங்ரூர், பட்டிண்டா மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பத்து மூன்று (43) கல்லூரிகள் இணைக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் இணைப்புப் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைந்தது. 2023-ஆம் ஆண்டின்படி பட்டியாலா மாவட்டம், பர்னாலா மாவட்டம், பதேகாட் சாகிப் மாவட்டம், சங்கரூர் மாவட்டம், பட்டிண்டா மாவட்டம், மாலேர்கோட்லா மாவட்டம், மான்சா மாவட்டம், மொகாலி மாவட்டம், ரூப்நகர் மாவட்டம், பரித்கோட் மாவட்டம் என பஞ்சாபின் ஒன்பது மாவட்டங்களிலுள்ள 268 கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.[2]
மானுடவியல், கலைகள், அறிவியல், பொறியியல், மொழி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் எழுபது (70) துறைகளில் கற்பித்தல் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் எனப் பன்முகம் கொண்ட பெரும் பாடசாலையாக இருக்கிறது.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Punjabi University, Patiala (India) University Introduction". www.dccpbi.com. 2006. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "List of Govt. and Private Colleges affiliated to Punjabi University, Patiala ( Academic Session 2017–18 )" (PDF). Punjabi University. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Punjabi University Patiala departments". punjabiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.