ஆறிலிருந்து அறுபது வரை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆறிலிருந்து அறுபது வரை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், சங்கீதா, எல் ஐ சி நரசிம்மன், ஜெயா, சக்ரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

ஆறிலிருந்து அறுபது வரை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
படாபட் ஜெயலட்சுமி
சோ ராமசாமி
சுருளி ராஜன்
வெளியீடு1979 செப்டம்பர், 9
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

தேங்காய் சீனிவாசன் தீடீரென்று மரணமடைவதால் அவரின் மூத்த மகன் ரஜினிகாந்த் மிகச் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்கிறார். அவருக்கு 2 தம்பிகள் ஒரு தங்கை. அவருக்கு தேங்காய் சீனிவாசன் வேலை செய்த நிறுவன முதலாளி வேலை தருகிறார். தம்பி தங்கைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார். அவர்கள் படிப்புக்காக நிறைய வருமானத்திற்கு மேல் செலவு செய்ய நேருகிறது. அவருக்கு பணநெருக்கடி ஏற்படும் சமயங்களில் அவரின் நண்பர் சோ ராமசாமியும் அவரின் நிறுவன (அச்சக) முதலாளியும் உதவுகிறார்கள். இவரின் நிறுவனத்தில் உள்ள சங்கீதாவுடன் காதல் வசப்படுகிறார். அவரும் காதலிக்கிறார் தம்பி தங்கைகளுக்காக இவர் பணம் செலவிடவேண்டியுள்ளதாலும் இவருடன் திருமணம் நடந்தால் பணநெருக்கடிக்கிடையே வாழ வேண்டும் என்பதாலும் இவரின் காதலை மறந்து விட்டு வேறொருவருடன் திருமணம் செய்து கொள்கிறார்.

தங்கை(ஜெயா) யின் திருமணத்திற்கு சிறிது நகை போடுவதாக சொல்கிறார். சுருளி ராஜன் தான் சொல்லும் பெண்ணை (படாபட் மகாலட்சுமி) திருமணம் செய்து கொண்டால் ரூ 5000 உடனே கிடைக்கும் என்று கூறுகிறார். தங்கையின் திருமணத்திற்கு பணநெருக்கடியில் இருப்பதால் இத்திருமணத்திற்கு ரஜினி உடனே ஒப்புக்கொள்கிறார். படாபட் மகாலட்சுமி குடும்பத்தார் ரூ 5000 தருவதாக சொல்லவில்லை இது சுருளி சொன்னது.

கடும் சிரமம்பப்பட்டு தங்கையின் திருமணத்தை நடத்துகிறார். பெரிய தம்பி எல். ஐ. சி நரசிம்மன் முதல் வகுப்பில் கல்லூரியில் தேர்ச்சிபெறுகிறார். அவர் தன் நண்பனின் உதவியால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர்கிறார். ஆனால் அவர் குடும்பத்திற்காக பணம் கொடுக்காமல் தனக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொள்கிறார். அண்ணனுடன் மனவருத்தம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இளைய தம்பியும் (சக்ரவர்த்தி) வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இவர் வேலை செய்த நிறுவனத்தில் முதலாளி மகன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இதுவரை வாங்கிய பணத்தை கட்டினால் தான் வேலைக்கு வரலாம் அதுவரை வர தடைவிதிக்கிறார். முதலாளி பக்கவாதம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாகி விடுகிறார். தம்பி தங்கைகள் இவரை மதிப்பதில்லை மேலும் இவர் அவர்களை பார்கச் செல்லுவதையும் வெறுக்கிறார்கள். பெரிய தம்பி தன் திருமணத்திற்கு நேரில் வந்து அழைக்காமல் அழைப்பிதழை அஞ்சல் வழி அனுப்புகிறார்.

வறுமையின் காரணமாக இவர்கள் சேரிப்பகுதியில் குடிபுகுகின்றனர். நண்பன் சோ உதவியால் அச்சகத்தில் மெய்ப்புத் திருத்தல் வேலை கிடைக்கிறது. அங்கு தான் எழுதிய கதை ஒன்றை வெளியிடமுடியுமா என்று கேட்கிறார். அக்கதை வெளியாவதற்குள் தீ விபத்தில் இவர்களின் இரு குழந்தைகளை காப்பாற்றிவிட்டு படாபட் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததால் அவரின் காப்பீட்டுத்தொகை ரஜினிக்கு கிடைக்கிறது. இவரின் கதைக்கு நல்ல வரவேற்பு நிறைய கதைகள் எழுதுகிறார் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசதியான நிலைக்கு உயர்கிறார். தம்பி தங்கைகள் இவரை தங்கள் அண்ணன் என்று எங்கும் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர்.

வகை தொகு

நாடகப்படம்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் இயற்றியிருந்தார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்மணியே காதல்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:27
2. "வாழ்க்கையே வேசம்"  பி. ஜெயச்சந்திரன் 4:29
3. "ஆண்பிள்ளை என்றாலும்"  எஸ். பி. சைலஜா, பி. ௭ஸ். சசிரேகா 4:32
4. "தலைப்புப் பாடல்"  இளையராஜா 3:03
மொத்த நீளம்:
16:31

மேற்கோள்கள் தொகு

  1. "'ஆறிலிருந்து அறுபது வரை' - அப்பவே அப்படி கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறிலிருந்து_அறுபது_வரை&oldid=3712415" இலிருந்து மீள்விக்கப்பட்டது