டி. கே. எஸ். நடராஜன்

தமிழக திரைப்பட நடிகர், தெம்மாங்கு பாடகர்

டிகேஎஸ். நடராஜன் (23 சூலை 1933 – 5 மே 2021) என்பவர் தமிழகத் திரைப்பட நடிகர் மற்றும் தெம்மாங்கு பாடகர் ஆவார். தமிழ் நாடகத்துறையில் புகழ்வாய்ந்த டிகேஎஸ் கலைக்குழுவில், இவர் சிறுவனாக இருந்தபோது சேர்ந்து நடித்ததால் நடராஜன் என்ற இவரது பெயருக்கு முன்னாள் டிகேஎஸ் என்ற அடைமொழியோடு டிகேஎஸ். நடராஜன் என அழைக்கப்படுகிறார்.

டி. கே. எஸ். நடராஜன்
பிறப்பு(1933-07-23)23 சூலை 1933
இறப்பு5 மே 2021(2021-05-05) (அகவை 87)[1]
சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்டிகேஎஸ்
பணிநடிகர், நாட்டுப்புறப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1954–2006

நடிகராக

தொகு

1954 இல் வெளியான ஸ்ரீதர் வசனம் எழுதிய ரத்தபாசம் படத்தில் டிகேஎஸ் நடராஜன் திரைப்பட நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாடகராக

தொகு

வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் நடிகர் அர்ஜுன் நடித்த 'வாத்தியார்' படத்தில் மீள்கலப்பு (remix) செய்திருந்தார்கள். அந்த பாடலிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார்.[2]

மறைவு

தொகு

நடராஜன் 2021 மே 5 அன்று சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது 87-வது அகவையில் காலமானார்.[3][4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Shameena Parveen, ed. (சமயம்). என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் புகழ் டிகேஎஸ் நடராஜன் மரணம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ப. கவிதா குமார் (2 சனவரி 2018). "தெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன்". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2018.
  3. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. Dinamalar (2021-05-05). "‛என்னடி முனியம்மா... பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் மறைவு | Actor and singer T.K.S Natarajan passed away". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
  6. "என்னடி முனியம்மா பாடல் புகழ் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._எஸ்._நடராஜன்&oldid=3762831" இலிருந்து மீள்விக்கப்பட்டது