ஆறு. நாகப்பன்

ஆறு. நாகப்பன் (பிறப்பு: மார்ச்சு 20 1944) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளராகவும், பல ஆண்டுகள் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராகவும் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார். சிறந்த ஆன்மீகப் பேச்சாளரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், திறனாய்வுகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம், தமிழ்க் கவிதைகளை மலாயில் மொழிபெயர்த்து "தேவான் பஹாசா" என்னும் மலாய் இதழில் பதிப்பித்துமுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் பல ஆண்டுகளாக "சக்தி" என்னும் சிவனிய சமய இதழைத் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பதிப்பித்து வருகிறார்.

நூல்கள்

தொகு
  • "கோணல் ஆறு" (சிறுகதைகள்)
  • "சிறுகதைச் சிற்பி சி.வடிவேல் வாழ்வும் பணியும் - நினைவு மலர்"
  • "கம்பி மேல் நடக்கிறார்கள்" (சிறுகதைத் தொகுப்பு, 2006)

பரிசில்களும், விருதுகளும்

தொகு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் (2006).

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு._நாகப்பன்&oldid=3518222" இலிருந்து மீள்விக்கப்பட்டது