ஆறு மாநில இடைத்தேர்தல், 2016
2016 ஆறு மாநில இடைத்தேர்தல் என்பது இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியிலும் 2016 நவம்பர் 19 ஆம் தேதி சில மக்களவை தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்த (வாக்குப்பதிவு நடந்த நாள்) இடைத்தேர்தலைக் குறிக்கிறது. [1][2] [3] நவம்பர் 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
அருணாச்சலப் பிரதேசம்
தொகுஅருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கலிகோ புல் இறந்ததால் ஆயுலிஅங் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது.
ஆயுலிஅங்
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த (2014) தேர்தலில் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
பாசக | தாசங்குலு புல் | 5,326 | 1,502 (பானிம் ரி)[4] |
கட்சி சாராதவர் | யோம்பி இக்ரி | 4,384 | 7,272 (கலிகோ புல்) |
அசாம்
தொகுஅசாமில் ஒரு மக்களவை தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.
பைதலங்சோ (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு |
---|---|---|---|
பாசக | மான்சிங் ராங்பி | 72,160 | 53,077 (அருண் தேரங்) |
காங்கிரசு | ருபோன்சிங் ரான்கேங் | 55,560 | 62,596 (மான்சிங் ராங்பி) |
கடந்த தேர்தலில் மான்சிங் ராங்பி காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்று பாசகவில் சேர்ந்ததால் பதவி விலகினார். இப்போது பாசக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
லேக்கிம்பூர் (மக்களவை)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கட்சிகள் 2014இல் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
பாசக | பிரதன் பருவா | 5,51,663 | 6,12,543 (சர்பானந்தா சோனோவால்) |
காங்கிரசு | எம் அரி பேகு | 3,61,444 | 3,20,405 (ரானே நர்ரா) |
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பதவி விலகியதால் நடந்த தேர்தலில் இத்தொகுதியை பாசக தக்கவைத்துக் கொண்டது.
மத்தியப் பிரதேசம்
தொகுமத்தியப் பிரதேசத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.
நேபாநகர் (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த (2013) சட்டமன்றத்தில் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
பாசக | மஞ்சு ராசேந்திர தாடு | 99,626 | 87,224 (ராசேந்திர சியாமல் தாடு)[5] |
காங்கிரசு | ஆன்டார்சிங் தேவிசிங் பார்டே அம்பா | 57,428 | 65,046 (ராமகிருட்டிணன் படேல்) |
நேபாநகர் சட்டமன்ற தொகுதியில் 2013இல் வெற்றி வேறுபாடு 22,178 வாக்குகள்.
சாதோல் (மக்களவை)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கட்சிகள் 2014இல் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
பாசக | இக்காயன் சிங் | 4,81,398 | 5,25,419 (தல்பட் சிங் பிரசாதே) |
காங்கிரசு | இமாதிரி தல்பிர் சிங் | 4,21,015 | 2,84,118 (ராசேசு நந்தினி சிங்) |
மேற்கு வங்காளம்
தொகுமேற்கு வங்காளத்தில் இரு மக்களவை தொகுதிகளுக்கும் ஓர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.
மான்டீசுவர் (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு |
---|---|---|---|
அஇதிகா | சிகத் பாஞ்சா | 1,47,316 | 84,134 (சாசல் பாஞ்சா) |
இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | முகமது ஒசுமான் கானி சர்க்கார் | 20,189 | 83,428(சௌத்திரி முகமது இதயத்துல்லா) |
பாசக | பிசுவஞித் போடோர் | 16,073 | 15,452 (பிசுவஞித் போடோர் ) |
கூச்பகார் (மக்களவை)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | 2014இல் கட்சிகள் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
அஇதிகா | பார்தா பிரதிம் ரே | 7,94,375 | 5,26,499 (ரேணுகா சின்கா) |
பாசக | எம் சந்திர பர்மன் | 3,81,134 | 2,17,653 (எம் சந்திர பர்மன்) |
பார்வர்டு பிளாக் | நிரிபேந்திர நாத் ராய் | 87,363 | 4,39,392 (தீபக் குமார் ராய்) |
தம்லுக் (மக்களவை)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | 2014இல் கட்சிகள் பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
அஇதிகா | அதிகாரி திப்யேந்து | 7,79,594 | 7,16,928 (அதிகாரி சுவேந்து) |
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | மந்திரா பாண்டா | 2,82,066 | 4,70,447 (சேக் இப்ராகிம் அலி) |
பாசக | அம்புசா மகான்தி | 1,96,450 | 86,265 (பாத்சலாம்) |
திரிபுரா
தொகுதிரிபுராவில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
பார்சலா (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | சமு சர்க்கார் | 15,769 |
பாசக | சிசுடா மோகன்தாசு | 12,395 |
2013 தேர்தல் முடிவுகள்[6]
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
காங்கிரசு | சிசேந்திர சர்க்கார் | 17,728 |
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | சிசேந்திர தாசு | 17,467 |
கோவாய் (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | பிசுவசித் தத்தா | 24,810 |
அஇதிகா | மோகன் தாசு | 8,716 |
2013 தேர்தல் முடிவுகள்[7]
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) | சமிர் தேப்சர்க்கார் | 22,692 |
காங்கிரசு | தீபக் மசூம்தார் | 13,859 |
தமிழ் நாடு
தொகுதமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி தஞ்சாவூரிலும் அரவக்குறிச்சியிலும் நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் இப்போது நடைபெற்றது, மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் இறந்ததால் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அரவக்குறிச்சி (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
அதிமுக | செந்தில் பாலாசி | 88, 068 |
திமுக | கே. சி. பழனிச்சாமி | 64, 407 |
இத்தொகுதியை திமுகவிடம் இருந்து அதிமுக கைப்பற்றியது. திமுகவின் கே. சி. பழனிச்சாமி இதன் கடந்த சட்டமன்ற உறுப்பினர்.
தஞ்சாவூர் (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
அதிமுக | ரங்கசாமி | 101362 |
திமுக | அஞ்சுகம் பூபதி | 74,488 |
திருப்பரங்குன்றம் (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு |
---|---|---|---|
அதிமுக | ஏ. கே. போசு | 1,13,032 | 93,453 (சீனிவேல்) |
திமுக | சரவணன் | 70,362 | 70,461 (மணிமாறன்) |
புதுச்சேரி
தொகுபுதுச்சேரியில் முதல்வர் நாராயண சாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு உறுப்பினர் ஜான்குமார் பதவி விலகியதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
நெல்லித்தோப்பு (சட்டமன்றம்)
கட்சி | வேட்பாளர் பெயர் | பெற்ற வாக்குகள் | கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு |
---|---|---|---|
காங்கிரசு | நாராயண சாமி | 18, 709 | 18,506 (சான்குமார்) |
அதிமுக | ஓம் சக்தி சேகர் | 7,565 | 6,365 (ஓம் சக்தி சேகர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bypoll Election Results 2016 Live Update: BJP wins big in MP, Assam & Arunachal; TMC sweeps Bengal, AIADMK holds Tamil Nadu
- ↑ மக்களவை முடிவுகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சட்டமன்ற முடிவுகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Arunachal Pradesh Assembly Election 2014 Constituency: Hayuliang (45) [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Madhya Pradesh (MP) Assembly (Vidhan Sabha) Election Results 2013". Archived from the original on 2019-03-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-26.
- ↑ Barjala (Tripura) Assembly Constituency Elections
- ↑ "Tripura Assembly Election 2013 " Constituency: Khowai (25)". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-26.
- 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம்[தொடர்பிழந்த இணைப்பு]