ஆற்காடு தனகோடி முதலியார்

இராவ் பகதூர் தனகோடி முதலியார் (Arcot Dhanakoti Mudaliar) ஆற்காடு தனகோடி முதலியார் என்றும் அழைக்கப்படும் இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை மாகாணத்தின் இருந்த ஓர் ஜமீந்தாரும், அறப்பணி செய்பவரும், தொழிலதிபரும் ஆவார்.

வன்னிய குல முதலியார்தொகு

இவர் 1852 ஆம் ஆண்டில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். [1] உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் மிகப்பெரிய நில உரிமையாளர்களான வன்னியர் சாதியைச் சேர்ந்தவர் ஆவார். [2] இவர் இராணுவ மற்றும் இரயில்வே ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். இது சென்னை சென்னை நகரத்தில் ஒரு ஒப்பந்த பேரரசராக இவரை வளர்த்தது. 1885 இல் பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தார். இவரது மருமகன் ஏ. தங்கவேலு நாயக்கரும் ஒரு ஒப்பந்தக்காரராக இருந்தார். [3]

அறப்பணிதொகு

இவர் தனது சொத்துக்களை பல நூலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கினார். புத்தகங்களை வாங்குவதற்காக இவர் இந்தியாவின் விக்டோரியா நினைவிடத்திற்கு நன்கொடை அளித்துள்ளார். அவை கன்னிமாரா பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. [4] மேலும் பிற காரணங்களுக்காகவும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். [5] [6]

மற்ற நடவடிக்கைகள்தொகு

முதலியார் ஞான சமாஜ அமைப்பின் உறுப்பினராக இருந்தார். இது ஒரு கருநாடக இசை சபாவாகும். இது சென்னையில் உள்ள மற்ற சபாக்களின் தாயாகவும் கருதப்படுகிறது. இவர் சர் பிட்டி தியாகராய செட்டியாருடன் சேர்ந்தார். [7] மேலும் இவர் விக்டோரியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்தார். [8]

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. The golden book of India; a genealogical and biographical dictionary of the ruling princes, chiefs, nobles, and other personages, titled or decorated, of the Indian empire, with an appendix for Ceylon. 
  2. Locality, Province and Nation Essays on Indian Politics 1870 to 1940. 
  3. Essays on Indian Politics 1870 to 1940. 
  4. "Connemara Public library, Dhanakoti Collection". 2018-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-02-11 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The revolutionary manager".
  6. Industry Commerce Journal, Volume 12, 1957. 
  7. "The first Sabha of Madras".
  8. The Victoria Technical Institute and Memorial Hall. https://books.google.com/books?id=tPlYAAAAYAAJ&q=dhanakoti+mudaliar&dq=dhanakoti+mudaliar&hl=en&sa=X&ved=0ahUKEwjQpt2BhrjLAhWQCI4KHVx_AlYQ6AEIMTAB.