ஆற்றுக்குருடு

ஆற்றுக்குருடு ஆங்கில மொழி: Onchocerciasis அல்லது ரோபில்ஸ் நோய் , என்பது ஒன்கொசிர்கா ஒல்வலஸ் எனும் ஒட்டுண்ணி புழுத் தொற்றினால் வரக்கூடிய ஒரு நோயாகும்.[1] கடுமையான அரிப்பு, தோலுக்குக் கீழே புடைப்பு, குருடாதல் [1] ஆகியவை இதன் அறிகுறிகள். திராகோமா [2] நோய்க்கு அடுத்து இதுவே தொற்றின் மூலம் குருடாவதற்கு இரண்டாவது பொதுக் காரணமாக இருக்கிறது.

ஆற்றுக்குருடு
An adult black fly with the parasite Onchocerca volvulus coming out of the insect's antenna, magnified 100x
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, tropical medicine
ஐ.சி.டி.-10B73.
ஐ.சி.டி.-9125.3
நோய்களின் தரவுத்தளம்9218
ஈமெடிசின்med/1667 oph/709
ம.பா.தD009855

நோய்க்குறியறிதல் தொகு

இந்த ஒட்டுண்ணிப் புழுவானது சிமுலியம் வகையைச் சார்ந்த கருப்பு ஈகடிப்பதால் பரவுகிறது.[1] வழக்கமாகத் தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல முறை கடித்தால் மட்டுமே நோய் ஏற்படும்.[3] இந்த ஈக்கள் ஆற்றுக்கு அருகில் வாழ்கின்றன. ஆகவே இந்த நோய்க்கும் இப்பெயர் வந்துள்ளது.[2] ஒருமுறை ஒரு நபரின் உடலுக்குள் சென்று விட்டால் லார்வா க்களை உருவாக்குகிறது. அது தோலை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது.[1] இங்கே அந்த நபரைக் கடிக்கும் ஈக்களுக்கும் தொற்று ஏற்படுகிறது .[1]

தோலின் ஒரு ஆய்வுதிசு வை சாதாரண உப்புநீர் இல் வைத்து லார்வா வெளிவருவதை கவனித்தல், லார்வா இருக்கிறதா எனக் கண்களைப் பரிசோதித்தல், தோலுக்கடியில் உள்ள புடைப்புகளுக்குள்ளே முதிர்ந்த புழுக்கள் உள்ளதா என்று பார்த்தல் உள்ளிட்டவை இந்த நோயை அறிவதற்குரிய பலவழிமுறைகள்.[4]

தடுப்பு முறைகளும் சிகிச்சையும் தொகு

இந்த நோய்க்கான ஒரு தடுப்பு மருந்து இல்லை.[1] தடுப்பு முறை என்பது ஈக்களால் கடிபடுவதை தவிர்த்துக் கொள்வதுதான்.[5] பூச்சி விலக்கி பயன்படுத்துதல் மற்றும் சரியான உடைகளை அணிதல் ஆகியவை உள்ளடக்கியதாகும்.[5] பூச்சிகொல்லி தெளித்தல் மூலம் ஈக்களின் தொகையைக் குறைப்பது முயற்சிகளில் அடங்கும்.[1] உலகத்தின் பல இடங்களிலும் வருடத்துக்கு இரண்டு முறை மொத்த மக்கள் தொகைக்கும் சிகிச்சையளிப்பது மூலம் இந்த நோயை அடியோடு ஒழிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.[1] தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையானது இவேர்மேக்டின் மருந்துடன் ஒவ்வொரு ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு அளிக்கப் படுகிறது .[1][6] இந்த சிகிச்சை லார்வாக்களை கொல்கிறது ஆனால் முதிர்ந்த புழுக்களை அல்ல.[7] இணைப்புற்ற ஒல்பகியாஎன்ற பாக்டீரியாவைக் கொல்கின்ற , டாக்ஸிசைக்ளின் என்ற மருந்தானது புழுக்களை பலவீனப் படுத்துவதாக தோன்றுகிறது. மேலும் சிலரால் பரிந்துரைக்கப் படுகிறது.[7] தோலுக்குக் கீழே இருக்கும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கவும் செய்யலாம் .[6]

நோய்த்தொற்றியலும் வரலாறும் தொகு

ஏறத்தாழ 1.7 முதல் 2.5 கோடி மக்கள் வரை ஆற்றுநோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் அதில் தோராயமாக 8 லட்சம் பேர் ஓரளவுக்கு பார்வைக் குறைவுடையவர்களாகிறார்கள்.[3][7] பெரும்பாலான தொற்றுக்கள் உப-சஹாரா ஆப்ரிக்காநாடுகளில் காணப்படுகிறது, இருப்பினும் யேமன் நாட்டிலும் நோயாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர் மேலும் மத்திய மற்றும் [[தென் அமெரிக்கா ]வின் தனித்த சில பகுதிகளிலும் காணப் படுகின்றன .[1] 1915 ஆம் ஆண்டு ,ருடால்போ ரோபில்ஸ் என்ற மருத்துவர் முதன்முறையாக இந்தப் புழுவை கண் நோயுடன் தொடர்பு படுத்தினார்.[8] இந்த நோய் உலக சுகாதார நிறுவனம் தயாரித்துள்ள புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் வரிசைப் பட்டியலில் உள்ளது.[9]

குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Onchocerciasis Fact sheet N°374". World Health Oragnization. March 2014. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
  2. 2.0 2.1 "Onchocerciasis (also known as River Blindness)". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
  3. 3.0 3.1 "Parasites – Onchocerciasis (also known as River Blindness) Epidemiology & Risk Factors". CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
  4. "Onchocerciasis (also known as River Blindness) Diagnosis". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
  5. 5.0 5.1 "Onchocerciasis (also known as River Blindness) Prevention & Control". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
  6. 6.0 6.1 Murray, Patrick (2013). Medical microbiology (7th ). Philadelphia: Elsevier Saunders. பக். 792. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-08692-9. http://books.google.ca/books?id=RBEVsFmR2yQC&pg=PA792. 
  7. 7.0 7.1 7.2 Brunette, Gary W. (2011). CDC Health Information for International Travel 2012 : The Yellow Book. Oxford University Press. பக். 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-983036-7. http://books.google.ca/books?id=5vCQpr1WTS8C&pg=PA258. 
  8. Lok, James B.; Walker, Edward D.; Scoles, Glen A. (2004). "9. Filariasis". Medical entomology (Revised ). Dordrecht: Kluwer Academic. பக். 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-1794-0. http://books.google.ca/books?id=C7OxOqTKYS8C&pg=PA301. 
  9. Reddy M, Gill SS, Kalkar SR, Wu W, Anderson PJ, Rochon PA (October 2007). "Oral drug therapy for multiple neglected tropical diseases: a systematic review". JAMA 298 (16): 1911–24. doi:10.1001/jama.298.16.1911. பப்மெட்:17954542. http://jama.jamanetwork.com/article.aspx?doi=10.1001/jama.298.16.1911. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுக்குருடு&oldid=2119014" இலிருந்து மீள்விக்கப்பட்டது