ஆற்றுத்துறை

ஆற்று நீரை மக்கள் பயன்படுத்தும் இடத்தை ஆற்றுத்துறை என்பர். இதனைப் பற்றிப் பண்டைய இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

கங்கை ஆற்றுத்துறை
இலக்கியச் செய்திகள்
தொகு
  • புகார் நகரத்தின் காவிரி ஆற்றிலும் [1] நல்லியக்கோடனின் தலைநகர் 'நன்மாவிங்கை'யிலும் [2] மகளிர் தனித்து நீராடுவதற்கென ஆற்றுத்துறைகள் இருந்தன. அவற்றை 'உண்துறை' [3],[4] என்றனர். பனித்துறை என்பது பனிக்காலத்தில் நீராடுவதற்கென்றே அக்கால வீட்டு மனைகளில் அமைக்கப்பட்டிருந்த துறை. இவை ஆற்றோர மனைகள்[5].
அடிக்குறிப்பு
தொகு
  1. துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி, நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்புஅகம் புகுதொறும், புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொருநராற்றுப்படை 239-241)
  2. துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
    பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
    தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
    நல் மா இலங்கை (சிறுபாணாற்றுப்படை 117 முதல்)

  3. மகளிர் மட்டும் நீராடும் உள்பக்கத் துறை.
  4. வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
    புனல் ஆடு மகளிர் (பெரும்பாணாற்றுப்படை 311)

  5. குண்டு நீர்ப்
    பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
    கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
    நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
    மணம் கமழ் மனைதொறும் பொய்தல் (மதுரைக்காஞ்சி 585 முதல்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுத்துறை&oldid=2745962" இலிருந்து மீள்விக்கப்பட்டது