நல்லியக்கோடன்
நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். ஓய்மான் நாட்டு அரசன். ஓவியர் குடிமக்களின் தலைவன். இவனது தலைநகர் நன்மாவிலங்கை. எயிற்பட்டினம், கிடங்கில் முதலிய ஊர்கள் இவனுக்கு உரியன.[1] இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் ஏழு நரம்பு கொண்ட யாழை மீட்டிப் பாடும் சிறுபாண் என்னும் இசைவாணர்களை இவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். அப்போது அவனிடம் முன்பு தான் பெற்ற பரிசில்களையும், அவனது பண்புகளையும், அவனை நடந்துகொள்ளும் பாங்கையும் குறிப்பிடுகிறார்.[2]
- இவன் நாடு உயர்ந்த மலைகளைக் கொண்டது.[3]
- இவனது அரண்மனை வாயில் மலை கண் விழித்தது போன்றது. கடவுள் மால்வரை கண் விடுத்து அன்ன அடையா வாயில் [4] பொருநர், புலவர், அந்தணர் ஆகியோர் இதில் தடையின்றி புகுந்து செல்லலாம்.
- இவன் முன்பு பாடிய புலவர் நத்தத்தனார்க்கு யானை, தேர் முதலான பரிசில்களை வழங்கினான். சிறுகண் யானையொடு பெருந்தேர் நல்கி [5]
- செய்ந்நன்றி அறிபவன்
- சிற்றினம் சேராதவன்
- இன்முகம் காட்டுபவன்
- இனிய செயல் புரிபவன்
- அஞ்சிய பகைவர்களை அரவணைப்பவன்
- சினம் வெஞ்சினமாக மாறாதவன்
- வீரர்களை மட்டுமே எதிர்த்துப் போர் புரிபவன்
- தன் படை சோரும்போது முன்னின்று தாங்குபவன்
- அரிவையர் முன் அறிவு மடையனாகி விடுவான்
- அறிஞர் முன் அறிவுத்திறம் காட்டுவான்
- வரிசை அறிந்து வழங்குவான்
- வரையறை இல்லாமல் வழங்குவான்
- முதியோரை அரவணைப்பான்
- இளையோருக்கு மார்பைக் காட்டிப் போரிடுவான்
- ஏர் உழவர்க்கு நிழலாவான்
- தேர் உழவர்க்கு வேலைக் காட்டுவான்
- பாணரின் துன்பத்தைப் போக்குவான்
- செந்நிற ஆடை போர்த்துவான்
- ஏறிச் செல்லக் குதிரை நல்குவான்.
- பரிசுகளை ஏற்றிச் செல்லத் திறந்த குதிரைவண்டிகள் நல்குவான்.
- சென்ற அன்றே வழங்குவான்
புறத்திணை நன்னாகனார் பாடல்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி (சனவரி 1961), சிறுபாணன் சென்ற பெருவழி, விக்கித்தரவு Q129261662
- ↑ நல்லியக்கோடன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ நெடுங்கோட்டு ... ஏற்றரும் சென்னிக் குறிஞ்சிக் கோமான் - சிறுபானாற்றுப்படை அடி 265
- ↑ சிறுபானாற்றுப்படை அடி 205
- ↑ சிறுபானாற்றுப்படை அடி 142
- ↑ சிறுபானாற்றுப்படை அடி 207-235
- ↑ சிறுபானாற்றுப்படை அடி 246-261
- ↑ புறநானூறு 176