ஆற்றுக் கழிமுகம்

(ஆற்று முகத்துவாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆற்றுப் படுகை (river delta) என்பது ஆற்றின் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வண்டல் மண்ணை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அதன் வேகம் குறைந்து படிய வைப்பதால் உருவாகும் ஒரு நிலவமைப்பு ஆகும்.[1][2]

சேக்ரமெண்டோ (கலிஃபோர்னியா) ஆற்றுக் கழிமுகம், 2009 மார்ச் 2009 தொடக்கத்தில்

உருவாக்கம்

தொகு

ஆறுகள் ஓடும்போது மண், மணல், குப்பைக் கூளங்கள் முதலியவற்றை அடித்துக்கொண்டு செல்லும். ஆறு கடலிலோ ஏரியிலோ கலக்கும்போது அதன் வேகம் குறைந்துவிடும். அப்பொழுது மண்ணும் மணலும் அங்கு படிந்துவிடுகின்றன. மண் படிந்து கொண்டே இருப்பதால் நாளடைவில் அங்கு ஒரு படுகை உண்டாகிறது.

பெயர்க்காரணம்

தொகு

ஆற்றின் இரு கிளைகளுக்கும் கடலுக்கும் இடையில் இப்படுகை ஒரு முக்கோண வடிவில் அமையும். இதற்குக் ஆற்றுப் படுகை (டெல்ட்டா)(Delta) என்று பெயர். டெல்ட்டா என்ற கிரேக்க எழுத்து முக்கோண வடிவில் இருக்கும். இதையொட்டி இதற்கு இப்பெயர் வந்தது.

பண்புகள்

தொகு

ஆற்றின் நடுவே இப்படுகை வளர்ந்து நீரோட்டத்தைத் தடை செய்வதால் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது. மக்கள் குடியிருப்பதற்கு இது பாதுகாப்பான இடமாகாது. ஏனெனில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் கிளையாறுகள் இடம்விட்டு இடம் மாறிவிடுவது உண்டு. ஆறு கடலில் கலக்குமிடத்தில் அதன் வேகம் அதிகமாக இருந்தால், கழிமுகப் படுகை அமையாது.[3]

வண்டல் மண்

தொகு

கழிமுகத் தீவில் படிந்துள்ள மண்ணுக்கு வண்டல் மண் என்று பெயர். இது வளம் நிறைந்தது. இப்படுகைகளில் பயிர் மிகச் செழிப்பாக வளரும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Miall, A. D. 1979. Deltas. in R. G. Walker (ed) Facies Models. Geological Association of Canada, Hamilton, Ontario.
  2. Elliot, T. 1986. Deltas. in H. G. Reading (ed.). Sedimentary environments and facies. Backwell Scientific Publications, Oxford.
  3. "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுக்_கழிமுகம்&oldid=3738158" இலிருந்து மீள்விக்கப்பட்டது