ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,986 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 209 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்கள்:[3][4]
- அயினாபுரம்
- அருணகிரிமங்கலம்
- அல்லிநகரம்
- ஆதனூர்
- இராமலிங்கபுரம்
- இரூர்
- எலந்தங்குழி
- எலந்தலப்பட்டி
- கண்ணப்பாடி
- காரை
- கீழமாத்தூர்
- குரும்பாபாளையம்
- குரூர்
- கூடலூர்
- கூத்தூர்
- கொட்டரை
- கொளக்காநத்தம்
- கொளத்தூர்
- சாத்தனூர்
- சில்லகுடி
- சிறுகன்பூர்
- சிறுவயலூர்
- செட்டிகுளம்
- திம்மூர்
- து. களத்தூர்
- தெரணி
- தேனூர்
- நக்கசேலம்
- நாட்டார்மங்கலம்
- நாரணமங்கலம்
- நொச்சிகுளம்
- பாடாலூர்
- பிலிமிசை
- புஜங்கராயநல்லூர்
- மாவிலிங்கை
- மேலமாத்தூர்
- வரகுபாடி
- ஜெமீன் ஆத்தூர்
- ஜெமீன் பேரையூர்