ஆலன் ஏல்

(ஆலன் ஃஏல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆலன் ஃஏல் (பிறப்பு 1958 மார்ச் 7)[1] ஓர் அமெரிக்க வானியலாளர். வால்வெள்ளி ஃஏல்-பாப் எனும் வால்வெள்ளியைத் தாமசு பாப் அவர்களுடன் இணையாகத் தனித்து கண்டுபிடித்து அதனால் பெயர்பெற்றவர்.

வாழ்க்கை

தொகு

ஆலன் ஃஏல் தாச்சிகாவா எனும் ஜப்பான் நாட்டு நகரில் அங்கு அமெரிக்காவுக்காக வான்படையில் பணிபுரிந்தவருக்கு மகனாகப் பிறந்தார். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவரது தந்தையார் நியூ மெக்சிகோவில் உள்ள அலமகார்டோவுக்குப் புறத்தே இருந்த ஃஆலோமன் வான்படைத்தளத்துக்கு இடமாற்றப்பட்டார்.[2] அமெரிக்க வான்படைக் கல்விக்கழகத்தில் 1980இல் பட்டம் பெற்ற இவர், 1976முதல் 1983வரை அமெரிக்க வான்படையில் பணிபுரிந்தார். பிறகு இவர் 1986வரை தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது அவர் பொறியியல் ஒப்பந்தக்காரராக ஆழ் விண்வெளி வலையத்திலும் இருந்துள்ளார். ஓர் ஒப்பந்தக்காரராக வாயேஜர்-2 உட்பட, விண்கலம்சார்ந்த பல திட்டங்களில் வேலை செய்துள்ளார்.

வருணனை (Uranus) வாயேஜர் அடைந்ததும் இவர் தா.செ.ஆ, நிறுவனத்தை விட்டு விலகி [[நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெறச் சேர்ந்துள்ளார். 1992இல் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அப்போது வனியலாளருக்கு வேலையே கிடைக்காத்தால் இவர் தென்மேற்கு விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நிறுவினார். அது இப்போது புவியெழுச்சி நிறுவனம் என வழங்கப்படுகிறது. ஆலன் ஃஏல் சமூகத்தில் அறிவியல் கல்வி மேம்பட விரும்பியவர். அறிவியலாளருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவேண்டும் என நாட்டம் கொண்டவர். மேலும் மேம்பட்ட சமூகம் உருவாக ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும் என நினைத்தவர். 200 அளவுக்கும் மேற்பட்ட வால்வெள்ளிகளைக் கண்டபிறகு, 1995 இல் இவர் ஃஏல்-பாப் வால்வெள்ளியைத் தொலைநோக்கிவழி தன் நெடுஞ்சாலைப் பயணத்தின்போது சகாரிட்டசு விண்மீன்குழுவின் அருகே உள்ள மங்கலான பொருளாகத் தெரிவதைக் கண்ணுற்று இணைக்கண்டுபிடிப்பாளர்ஆகியவர்.[3] ஃஏல்-பாப் வால்வெள்ளிதான் 1976இல் கண்ட வெசுட்டு வால்வெள்ளிக்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டில் பரவலாகப் பலர்பார்த்த மிகப்பொலிவான வால்வெள்ளியாகும்.[4] இவருக்கு சச்சாரி, டைலர் எனக் கல்லூரியில் படிக்கும் இரு பிள்ளைகள் உண்டு. ஆலன் ஏல் இன்றும் நியூ மெக்சிகோ, கிளவுடுகிராஃப்டில் வாழ்கிறார்.[3]

இவர் ஒரு நாத்திகரும் ஐயுறவுவாதியும் ஆவார். மேலும் இணைய நம்பிக்கையிலிகள் மின்னம்பலக்குழுவின் வாரியத் தகைமை உறுப்பினரும் ஆவார்'.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Hale, Alan. "Comet Image Gallery 1". earthriseinstitute.org. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012. March 7, 1986 (my 28th birthday)
  2. Hale, Alan (August 2009). Jackson, Devon. ed. "My Secret Place". New Mexico Magazine. http://www.nmmagazine.com/my_secret_place_hale_aug09.php. பார்த்த நாள்: July 9, 2012. 
  3. 3.0 3.1 Newcott, William (December 1997). "The Age of Comets". National Geographic Society. Archived from the original on 12 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. Baalke, Ron. "Comet Hale-Bopp". Jet Propulsion Laboratory. California Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 7 December 2009. Comet Hale-Bopp was ... the brightest comet seen since Comet West in 1976.
  5. Alan Hale; Dan Barker (2011). The Good Atheist: Living a Purpose-Filled Life Without God. Ulysses Press. pp. 175–176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781569758465. Oh, I have plenty of biases, all right. I'm quite biased toward depending upon what my senses and my intellect tell me about the world around me, and I'm quite biased against invoking mysterious mythical beings that other people want to claim exist but which they can offer no evidence for. By telling students that the beliefs of a superstitious tribe thousands of years ago should be treated on an equal basis with the evidence collected with our most advanced equipment today is to completely undermine the entire process of scientific inquiry.
  6. "Internet Infidels Honorary Board". பார்க்கப்பட்ட நாள் 15 June 2012. He is a member of the Honorary Board of the online group, Internet Infidels.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஏல்&oldid=4025233" இலிருந்து மீள்விக்கப்பட்டது