ஆலம்கீர்பூர்

ஆலம்கீர்பூர் (இந்தி: अलाम्गिरपुर), இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது சிந்து நதிக் கரையோரத்தில் செழிப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் (கி.மு 3300–1300) ஒரு பகுதி.[1][2] இவ்விடம் சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிழக்கு அந்தலையில் உள்ளது.[3]

ஆலம்கீர்பூர்
தொல்லியல் களம்
நாடுஇந்தியா
மாகாணம்உத்தரப் பிரதேசம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)

அகழ்வாய்வுகள் தொகு

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1958, 1959 ஆம் ஆண்டுகளில் இவ்விடத்தில் ஒரு பகுதி ஆய்வை மேற்கொண்டது.[2] இவ்விடத்தில் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளிகளோடுகூடிய நான்கு பண்பாட்டுக் காலப் பகுதிகள் இருப்பதை அகழ்வாய்வு எடுத்துக்காட்டியது. இவற்றுள் காலத்தால் முந்தியது 6 அடி தடிப்புக் கொண்டது. இது அரப்பா நாகரிகக் காலத்துக்குரியது.[4] இப்பகுதியில், சூளையில் சுட்ட செங்கற் தடயங்கள் இருந்தபோதும், இக்காலத்துக்குரிய கட்டிட அமைப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதே அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாததற்கான காரணமாக இருக்கக்கூடும்.[4] இங்கு கிடைத்த செங்கற்கள், 11.25 அங். முதல் 11.75 அங். வரையிலான நீளமும், 5.25 அங். முதல் 6.25 அங். வரையிலான அகலமும், 2.5 அங். முதல் 2.75 அங் வரையிலான தடிப்பும் கொண்டவை. மிகப்பெரிய செங்கற்கள் 14 அங். x 8 அங். x 4 அங். சராசரி அளவு கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கற்கள் உலைகளுக்கே பயன்பட்டன.[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Encyclopedia of Indian Archeology, by A. Ghosh.
  2. 2.0 2.1 A. Ghosh, தொகுப்பாசிரியர். "Excavations at Alamgirpur". Indian Archaeology, A Review (1958-1959). Delhi: Archaeol. Surv. India. பக். 51–52. 
  3. "Map" இம் மூலத்தில் இருந்து 2006-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060613195311/http://pubweb.cc.u-tokai.ac.jp/indus/english/map.html. 
  4. 4.0 4.1 4.2 India, Archeological Survey of. "India Archeology 1958-59". Ed : Amalanada Gosh (Archeological Survey of India): pp. 51–52. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201958-59%20A%20Review.pdf. பார்த்த நாள்: 3 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்கீர்பூர்&oldid=3543033" இருந்து மீள்விக்கப்பட்டது