ஆலுரு வெங்கட ராவ்
ஆலுரு வெங்கட ராவ் (Aluru Venkata Rao) (சில நேரங்களில் ஆலுரு வெங்கட ராயா என்றும் அழைக்கப்பட்டார்.) (12 சூலை 1880 - 25 பிப்ரவரி 1964) இவர் ஓர் இந்திய புரட்சியாளரும், வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். கர்நாடக பிராந்தியத்தில் ஒரு தனி கர்நாடக மாநிலத்திற்கான பங்களிப்புக்காக இவர் கர்நாடக குலப்புரோகிதர் என்று போற்றப்படுகிறார். மைசூர், மும்பை மாகாணம் மற்றும் ஐதராபாத்தின் கன்னட மொழி பேசும் மக்களுக்காக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக கர்நாடக எக்கிகாரனா இயக்கத்தை மேற்கொள்வதில் இவர் பிரபலமானார்.
ஆலுரு வெங்கட ராவ் | |
---|---|
பிறப்பு | பிஜாப்பூர், கருநாடகம் | 12 சூலை 1880
இறப்பு | 25 பெப்ரவரி 1964 | (அகவை 83)
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | கர்நாடகா குலப்புரோகிதர் |
கல்வி | இளங்கலை, சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெர்குசன் கல்லூரி |
பணி | எழுத்தாளர், அறிஞர், மொழிபெயர்ப்பாளர், வெளியீட்டாளர், சீர்திருத்தவாதி மற்றும் தலைவர் |
அறியப்படுவது | ஒன்றுபட்ட கர்நாடகம் (கர்நாடக எக்கிகாரனா இயக்கம்) |
இவர் ஜெய கர்நாடகா என்ற தனது சொந்த செய்தித்தாளைத் தொடங்கினார். செய்தித்தாளின் ஒரே நோக்கம் கர்நாடகாவின் மாநில நிலைக்கு பாடுபடுவதாகும் என்று கூறினார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 1880 சூலை 12 ஆம் தேதி வருவாய் துறையில் தலைமைக் கணக்காளராக பணியாற்றிய பீமா ராவ் என்பவருக்குப் பிறந்தார். இவரது குடும்பம் கர்நாடகாவின் பிஜாப்பூர் உள்ள மரபுவழி மத்வ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெர்குசன் கல்லூரியில் இளங்கலையும், சட்டமும் படித்தார். அங்கு விநாயக் தாமோதர் சாவர்க்கர், சேனாபதி பாபாட் மற்றும் பால கங்காதர திலகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். இவர் திலகரின் நெருங்கிய நண்பராக இருந்து அவரது கீதை இகசியம் என்ற நூலை கன்னட மொழியில் மொழிபெயர்த்தார்.[2][3][4][5]
படைப்புகள்
தொகுசந்திரோதயா, கர்நாடக பத்ரா, மற்றும் ராஜகம்சா, கர்நாடக விருத்தா போன்ற செய்தித்தாள்களுக்கு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார் . 1906 ஆம் ஆண்டில் இவர் ஒரு மாத இதழான வகுபூசானாவின் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.[6] நவம்பர் 1922 இல், ஜெய கர்நாடகா என்ற மாத இதழைத் தொடங்கினார். இது பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டது.[7] இவர் எழுதிய சுமார் 27 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது 1907 இல் வித்யாரண்யா சரித்திரே என்பதாகும். கர்நாடக கதா வைபவம், கர்நாடக வீரரத்நாகலு, கர்நாடகத்வ சூத்திரகலு மற்றும் கர்நாடகத்வ விகாசா போன்றவையும் அடங்கும்.[3] 1907 ஆம் ஆண்டில் இவர் கன்னட எழுத்தாளர்களின் மாநாட்டை ஏற்பாடு செய்தார். அடுத்த ஆண்டு கர்நாடக கிரந்த பிரசாரதா மண்டலியைத் தொடங்கினார். 1930 இல் மைசூரில் நடைபெற்ற கன்னட சாகித்ய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். திலகரின் விருப்பத்திற்கு இணங்க, அவரது படைப்பான கீதை இகசியம் என்னும் நூலை மராத்தியில் இருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்த்தார்.[8][9] இவர் பகவத் கீதையை சுயாதீனமாக விளக்கி, கன்னடத்தில் கீதை பிரகாசா, கீதை பரிமலா, கீதை சந்தேசா, கீதை குசுமா மஞ்சரி ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
கர்நாடகட குலப்புரோகிதர்
தொகுநவம்பர் 1, 1956 அன்று கர்நாடகா ஒன்றுபட்டபோது இவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இவர் அம்பிக்குச் சென்று விருபாக்சர் கோவிலில் புவனேசுவரி தெய்வத்திற்கு பூசை செய்து கர்நாடகத குலப்புரோகிதர் என்ற பெயரைப் பெற்றார். தேசிய கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவின் பெயர் இடம் பெறாதது குறித்து இவர் மிகவும் வருந்தினார். மேலும் அதுகுறித்து பிரதமருக்கும் இந்தியக் குடியரசுத்தலைவருக்கும் எழுதினார். தலைநகரான பெங்களூருவில் 1963 ஆம் ஆண்டில் மாநிலம் அமைக்கப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளில் இவர் கௌரவிக்கப்பட்டார்.[2]
மரபு
தொகு- இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , கர்நாடக அரசு பெங்களூரில் உள்ள ஆல்பர்ட் விக்டர் சாலையின் பெயரை ஆலுர் வெங்கட ராவ் சாலை (ஏ.வி. சாலை) என்று மாற்றியது. [10]
- கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ஒரு குறுவட்டு இவரது 49 வது நினைவு ஆண்டு விழாவில் மத்திய இந்திய மொழி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. [11]
குறிப்புகள்
தொகு- ↑ "Who is Alur Venkat Rao?". The Hindu. 2 June 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/who-is-alur-venkat-rao/article7272770.ece.
- ↑ 2.0 2.1 Encyclopaedia of Indian Literature: A-Devo.
- ↑ 3.0 3.1 Encyclopaedia of the Hindu World.
- ↑ Travels of Bollywood Cinema: From Bombay to LA.
- ↑ Karnataka Government and Politics.
- ↑ Grover, Verinder; Arora, Ranjana (1996). Encyclopaedia of India and her states: Karnataka, Kerala and Tamil Nadu, Volume 8. p. 40.
- ↑ Alexander, Paul; Parthasarathy, Rangaswami. Sri Lankan Fishermen: Rural Capitalism and Peasant Society. p. 207.
- ↑ Khajane, Muralidhara. "Karnataka: State of diverse cultures, but language is the binding factor". http://www.thehindu.com/news/national/karnataka/karnataka-state-of-diverse-cultures-but-language-is-the-binding-factor/article7827860.ece.
- ↑ Suryanath U. Kamath (1996). A Handbook of Karnataka. p. 46.
- ↑ "The mystery behind naming Bengaluru's AV Road revealed". தி எகனாமிக் டைம்ஸ். 2015. http://economictimes.indiatimes.com/magazines/panache/the-mystery-behind-naming-bengalurus-av-road-revealed/articleshow/47538221.cms.
- ↑ "Death anniversary of Alur Venkata Rao". தி இந்து. 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/death-anniversary-of-alur-venkata-rao/article4457173.ece.