ஆலுவா அரண்மனை
ஆலுவா அரண்மனை (Aluva Palace) திருவாங்கூர் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 1900 ஆம் ஆண்டில் மன்னர் மகாராசா கார்த்திகைத் திருநாள் தர்ம ராசாவால் கட்டப்பட்ட திருவாங்கூர் அரச அரண்மனையாகும்.[1] ஆல்வாய் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆலுவா அரண்மனை கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நகரில் அமைந்துள்ளது.
ஆலுவா அரண்மனை Aluva Palace | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | கேரளக் கட்டிடக்கலை |
நகரம் | ஆலுவா |
நாடு | இந்தியா |
கட்டுவித்தவர் | திருவிதாங்கூர் மகாராசா |
வரலாற்று முக்கியத்துவம்
தொகுஅரண்மனை ஒரு காலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால் ஒரு குடியிருப்பாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.[2] பெரியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம்[3] அரச குடும்பத்தை பார்வையிடும் மக்களுக்கு விருந்தினர் மாளிகையாகவும் செயல்பட்டது.[4] 1991 ஆம் ஆண்டில் திருவாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா இறந்த பிறகு அரண்மனை கேரள மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது, கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரண்மனை இப்போது விருந்தோம்பல் மையமாக செயல்படுகிறது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Historic grandeur". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ "Alwaye Palace Aluva - Aluva Palace Kerala". kerala-tourism.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ "കുളിർകാറ്റ്, കിളിപ്പാട്ട്; ഹരിതവനത്തിലൂടെ നല്ലനടപ്പ്". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ Manoj (2014-07-10). "Aluva, Of Rivers and History". nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ "Agriculture". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
- ↑ "ஆலுவா". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.