ஆல்கனோலமீன்

(ஆல்கனோலமீன்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆல்கனோலமீன்கள் (Alkanolamines) என்பவை ஆல்க்கேன் கட்டமைப்பில் ஐதராக்சில் (-OH) குழு, அமினோ (-NH2, -NHR மற்றும் -NR2) குழு என இரண்டு குழுக்களையும் பெற்றுள்ள வேதிச்சேர்மங்களைக் குறிக்கிறது. விரிவான பொருள் கொண்ட ஆல்கனோலமீன் என்ற சொல் சில சமயங்களில் துணை வகைப்பாடாகவும் பயன்படுத்தப்படுகிறது.

2-அமினோ ஆல்ககால்கள்

தொகு
 
எளிய அமினோ ஆல்ககாலான எத்தனோலமீனின் வேதிக் கட்டமைப்பு

2-அமினோ ஆல்ககால்கள் என்பவை கரிமச்சேர்மங்களில் ஒரு முக்கியமான வகையாகும். இவை அமீன் குழு, ஆல்ககால் குழு என இரண்டு வேதி வினைக்குழுக்களையும் பெற்றுள்ள வேதிச்சேர்மங்களைக் குறிக்கின்றன. பெரும்பாலும் அமீன்களும் எப்பாக்சைடுகளும் வினைபுரிவதால் இவை உண்டாகின்றன. அமினோ ஆல்ககால்கள் தொழிற்சாலைகளில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. எளிய ஆல்கனோலமீன்கள் கரைப்பான்களாகவும், செயற்கை இடைநிலைப் பொருட்களாகவும். உயர் கொதிநிலை காரங்களாகவும் பயன்படுகின்றன [1].

பொதுவான அமினோ ஆல்ககால்கள்

தொகு
  • எத்தனோலமீன்கள்
  • அமினோமெத்தில் புரொப்பனால்
  • எப்டமினால்
  • ஐசோயிட்டாரின்
  • புரோப்பனோலமீன்கள்
  • சிபிங்கோசைன்
  • மெத்தனோலமீன் (எளிய அமினோ ஆல்ககால்)
  • டைமெத்திலெத்தனோலமீன்
  • என்-மெத்திலெத்தனோலமீன்

பீட்டா முடக்கிகள்

தொகு

பீட்டா முடக்கிகளின் துணைப்பிரிவு பெரும்பாலும் ஆல்கனோலமீன் பீட்டா முடக்கிகள் என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • புரோப்பரனோலோல்
  • பிண்டோலோல்

இயற்கைப் பொருட்கள்

தொகு

புரதங்களில் பலவும் பெப்டைகளும் ஆல்ககால் மற்றும் அமினோ குழுக்கள் இரண்டியும் ஒருங்கே பெற்றுள்ளன. செரைன், ஐதராக்சிபுரோலைன் என்ற இரண்டு அமினோ அமிலங்கள் ஆல்கனோலமீன்களாகக் கருதப்படுகின்றன.

  • வெராடிரைடைன் மற்றும் வெராட்ரைன்
  • அட்ரோபைன் போன்ற டிரோப்பேன் ஆல்கலாய்டுகள்
  • இயக்குநீர்கள் மற்றும் நரம்புக் கடத்திகள்

அமினோ அமிலங்களிலிருந்து 2-அமினோ ஆல்ககால்கள்

தொகு

ஒவ்வொரு அமினோ அமிலத்தையும் கோட்பாட்டின்படி ஐதரசனேற்றம் செய்தால் அவற்றுடன் தொடர்புடைய 2-அமினோ ஆல்ககால்களைத் தயாரிக்க முடியும். புரோலைனிலிருந்து புரோலினோல் மற்றும் வேலைனிலிருந்து வேலைனோல் தயாரிக்கப்படுவது இதற்கான உதாரணங்களாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Matthias Frauenkron, Johann-Peter Melder, Günther Ruider, Roland Rossbacher, Hartmut Höke "Ethanolamines and Propanolamines" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a10_001

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்கனோலமீன்&oldid=3992602" இலிருந்து மீள்விக்கப்பட்டது