ஆல்காடையீன்

ஆல்காடையீன்(Alkadiene) என்பது இரண்டு கார்பன்கார்பன் இரட்டைப் பிணைப்புகள் [1]உடைய ஒரு சேர்மமாகும். இந்த ஐதரோ கார்பன் சேர்மத்தில் வளையம் இல்லாமல் சங்கிலி கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ இரட்டைப் பிணைப்புகள் இருக்கும். தனித்த இரட்டைப் பிணைப்பு கொண்ட ஆல்காடையீன்கள், அடுத்தடுத்த இரட்டைப்பிணைப்பு கொண்டவை, ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு கொண்டவை என இரட்டைப்பிணைப்புகள் திரள்கின்ற இடத்தின் அடிப்படையில் சேர்மங்கள் மாறுபடுகின்றன. ஒரு திரள் ஆல்காடையீனில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கும்[2]

எடுத்துக்காட்டு:

CH2=C=CH2 - 1,2 புரோபாடையீன்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Alkenes". Compendium of Chemical Terminology Internet edition.
  2. "Organic Chemistry". Archived from the original on 2015-06-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்காடையீன்&oldid=3619104" இலிருந்து மீள்விக்கப்பட்டது