புரோபாடையீன்

புரோபாடையீன் (Propadiene) என்பது H2C=C=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய அலீன் வகை கரிமச் சேர்மமாகும்[1]. இச்சேர்மத்தில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் ஒரேகார்பன் அணுவுடன் இணைந்திருக்கின்றன. மெ.அ.பு.பு.வாயுவின் ஒரு பகுதிப்பொருளாக புரோபாடையீன் இருக்கிறது. மெத்திலசிட்டிலீன்-புரோபாடையீன்புரோபேன் என்பதன் சுருக்கம் மெ.அ.பு.பு வாயு எனப்படுகிறது. இவ்வாயு சிறப்புநிலை உருக்கிப் பிணைத்தலில் பயன்படுத்தப்படுகிறது.

புரோபாடையீன்
Stereo structural formula of propadiene with explicit hydrogens
Stereo structural formula of propadiene with explicit hydrogens
Spacefill model of propadiene
Spacefill model of propadiene
Ball and stick model of propadiene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
அல்லீன்
Allene
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோபா-1,2-டையீன் (பதிலீட்டுப்பெயர்)
இருமெத்திலீன்கார்பன்,
இருமெத்திலீன்மீத்தேன்
(கூட்டுப்பொருள்)
இனங்காட்டிகள்
463-49-0 Y
Beilstein Reference
1730774
ChEBI CHEBI:37601 Y
ChEMBL ChEMBL116960 Y
ChemSpider 9642 Y
EC number 207-335-3
Gmelin Reference
860
InChI
  • InChI=1S/C3H4/c1-3-2/h1-2H2 Y
    Key: IYABWNGZIDDRAK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த புரோபாடையீன்
பப்கெம் 10037
  • C=C=C
  • C(=C)=C
UN number 2200
பண்புகள்
C3H4
வாய்ப்பாட்டு எடை 40.07 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −136 °C (−213 °F; 137 K)
கொதிநிலை −34 °C (−29 °F; 239 K)
மட. P 1.45
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு Flammable F+
R-சொற்றொடர்கள் R12
S-சொற்றொடர்கள் S9, S16, S33
வெடிபொருள் வரம்புகள் 13%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் சமநிலை

தொகு

அல்லீன், மெத்திலசிட்டிலீனுடன் சமநிலை கொண்டுள்ளது. சிலசமயங்களில் இக்கலவை மெ.அ.பு.டை வாயு (மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன்) என்றும் அழைக்கப்படுகிறது.

H3CC≡CH H2C=C=CH2

இதற்கான சமநிலை மாறிலியின் மதிப்பு Keq = 0.22 270 பாகை ஸெல்சியசில் அல்லது 5 பாகை செலிசியசு வெப்பநிலையில் 0.1 என்பதாக உள்ளது.

வேதித் தொழிற்சாலைகளில் முக்கியமான ஊட்டு மூலப்பொருளாக விளங்கும் புரோபாடையீன் வாயு, புரோப்பேனை புரொப்பீனாகப் பிளக்கும் வினையில் பக்க விளைப்பொருளாகவே தோன்றுகிறது. புரொப்பீனின் வினையூக்க பல்லுறுப்பியாக்கல் வினையிலும் மெத்திலசிட்டிலீன் – புரோபா டையீன் வாயு இடையூறு செய்கிறது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "allenes". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Klaus Buckl, Andreas Meiswinkel "Propyne" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.m22_m01

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோபாடையீன்&oldid=3772135" இலிருந்து மீள்விக்கப்பட்டது