ஆல்பர்ட்டு II (குரங்கு)

விண்வெளிக்கு சென்ற விலங்கு

ஆல்பர்ட்டு II (குரங்கு) (Albert II (monkey)) 1949 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று வி2-ஏவுகணை மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகின் பழமையான குரங்கு வகை பாலூட்டிகளில் ஒன்றாகும். அமெரிக்கா நாட்டின் நியூமெக்சிகோ மாநிலத்தின் தளத்திலிருந்து வி2- ஏவுகணை செலுத்தப்பட்டது. ஏவுகணை 83 மைல்கள் (134 கிமீ) பயணம் செய்து உயரத்தை அடைந்தது. ஆல்பர்ட்டு மீண்டும் புவிக்குள் நுழையும் போது வான்குடை செயலிழந்ததால் விண்கலம் அதிக வேகத்தில் தரையில் மோதியதால் இறந்தது.[1][2] ஆல்பர்ட்டின் சுவாசம் மற்றும் இருதயவியல் தரவுகள் தாக்கத்தின் தருணம் வரை பதிவு செய்யப்பட்டிருந்தது.[3]

1949 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் ஓலோமன் விமானப்படை தளத்தில் இருந்து வி-2 ஏவுதல் எண். 47 ஏவுகணையானது விண்வெளியில் முதல் விலங்கும் முதல் பாலூட்டியுமான ஆல்பர்ட்டு II குரங்கை ஏற்றிச் சென்றது.

ஆல்பர்ட் II இன் விமானம், அலமோகோர்டோ விமானப்படை ஏவுகணை மேம்பாட்டு மையத்தால் வழி நடத்தப்பட்டு, ஓலோமன் விமானப்படைத் தளத்தின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டது. ஏனெனில் முன்னதாக 1948 ஆம் ஆண்டு ஆல்பர்ட்டு I (குரங்கு)" அனுப்பும் திட்டம் ஏவுகணை எண் 37" என நியமிக்கப்பட்ட வி-2 ஏவுகணை 39 மைல்கள் (62 கிமீ) பயணம் செய்து இடை வளிமண்டல அடுக்கு உயரத்தை அடைந்து தோல்வியடைந்தது. எனவே ஆல்பர்ட் I திட்டத்தில் அனுபவித்த நெருக்கடியான பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக விமானங்களுக்கு இடையே விண்கலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

முன்னதாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உயிரினங்கள்

தொகு

ஆல்பர்ட் II திட்டத்திற்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரே உயிரினம் பழ ஈக்கள் மட்டுமேயாகும். பிப்ரவரி 20, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியன்று வி-2 ஏவுகணை மூலம் துணை விமானத்தில் இவை அமெரிக்காவால் அனுப்பப்பட்டன. ஈக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Monkeys in Space: A Brief Spaceflight History
  2. Beischer, DE; Fregly, AR (1962). "Animals and man in space. A chronology and annotated bibliography through the year 1960.". US Naval School of Aviation Medicine ONR TR ACR-64 (AD0272581). http://archive.rubicon-foundation.org/9288. பார்த்த நாள்: June 14, 2011. 
  3. "The Beginnings of Research in Space Biology at the Air Force Missile Development Center, 1946–1952". History of Research in Space Biology and Biodynamics. NASA. January 1958. பார்க்கப்பட்ட நாள் June 26, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்டு_II_(குரங்கு)&oldid=3847746" இலிருந்து மீள்விக்கப்பட்டது