ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்
ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் ( Albert Hall Museum) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் இருக்கும் செய்ப்பூரில் அமைந்துள்ளது. மாநிலத்தின் மிகப்பழமையான அருங்காட்சியகமான இது மாநிலத்தின் சார்பாக இயங்கி வருகிறது. இந்தோ- இசுலாமிய கட்டிடக்கலைக்கு சிறப்பு சேர்க்கின்ற கட்டிடமாக, நகருக்கு வெளியே அமைந்துள்ள புதிய நுழைவாயில் எதிரில் கட்டப்பட்டுள்ள இராம் நிவாசு தோட்டத்தில் ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மிர் துச்மூல் உசெயின் வழிகாட்டுதலில் சர் சாமுவேல் சுவிண்டன் யாகோப் இவ்வருங்காட்சியகத்தை வடிவமைத்தார். 1887 ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. தொடக்கத்தில் மகாராசா இராம் சிங் இவ்விடத்தை ஒரு நகர அரங்கமாக நிலைநாட்டவே விரும்பினார். ஆனால், அரசு மைய அருங்காட்சியகம் எனக் கருதப்படும் இதை மகாராசாவை அடுத்து வந்த இரண்டாம் மாதோ சிங் இக்கட்டிடத்தை அருங்காட்சியகமாகவே இருக்க முடிவு செய்தார். இராம் நிவாசு தோட்டத்தின் ஒரு பகுதியாகவும், செய்ப்பூரின் கலை நயங்களை வெளிப்படுத்தும் ஓரிடமாகவும் இருக்கும் என இவர் நினைத்தார். கலைநயமிக்க பொருள்கள், ஓவியங்கள், கம்பளங்கள், தந்தங்கள், உலோகச் சிற்பங்கள் படிக வேலைப்பாடுகள் என பல்வேறு வகையான அரிய பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன [1]. நகரத்தைப் பார்வையிட வருகை தந்த வேல்சு இளவரசர் ஏழாம் எட்வர்டு (ஆல்பர்ட் எட்வர்டு) நினைவாக அருங்காட்சியகத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள் இதற்கான அடிகல் நாட்டப்பட்டது [1].
படக்காட்சியகம்
தொகு-
இரவு நேர ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்.
-
ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் செய்ப்பூர்.
-
அருங்காட்சியகத்தின் வெளிப்புறம்
-
அருங்காட்சியக கோபுரங்கள்
-
அருங்காட்சியகத்தின் வெளிப்புறம்
-
புத்த சுவரோவியம்
-
சமண தீர்த்தங்கரர்
-
பிரம்மா சிலை
-
ஆல்பர்டு மண்டபக் கலைப்பொருட்கள்
-
ஆல்பர்டு மண்டபக் கலைப்பொருட்கள்
-
இலட்சுமி நாராயணன் சிலை
-
ஆல்பர்டு மண்டபத்தில் பீங்கான்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jaipur City (or Jainagar)". The Imperial Gazetteer of India. 1909. p. 402.