ஆழ் கடல் நீர்

ஆழ் கடல் நீர் (Deep ocean water) என்பது புவியின் மேற்பரப்பில் காணப்படும் கடலின் ஆழத்தில் காணப்படும் குளிர்ச்சியான மற்றும் உப்பான தண்ணீரைக் குறிக்கும் பெயராகும். வெப்பத்தாலும் கரைந்துள்ள உப்பாலும் கடல்நீர் வேறுபடுகிறது. ஆழ் கடல் நீர் மற்றும் துருவப்பகுதியில் காணப்படும் நீரைவிட சூடான மேற்பரப்பு நீரானது பொதுவாக உப்பு மிகுந்த நீராக இருக்கும்[1]. துருவப்பகுதிகளில் இருக்கும் கடலின் மேற்பரப்பு நீரானது குளிர்ச்சியாகவும் புதியதாகவும் இருக்கும்[2]. சமுத்திரங்களில் உள்ள நீரின் மொத்த கன அளவில் சுமார் 90% அளவு தண்ணீர் ஆழ் கடல் நீராலானது ஆகும். ஆழ் கடல் நீர் மிகவும் குளிர்ச்சியான வெப்பநிலை , குறிப்பாக 0-3°செ வெப்பநிலை கொண்டதாகவும் 3.5% உப்புத்தன்மை மிகுந்ததாகவும் காணப்படுகிறது. கடலியல் அறிஞர்கள் உப்புத்தன்மையின் அளவை ஆயிரத்துக்கு முப்பத்தைந்து பகுதிகள் என்றும் ஆழ் கடல் நீரை ஆங்கிலச் சுருக்கெழுத்தில் DOW என்றும் குறிப்பிடுவர்[3]

அவாய் இயற்கை ஆற்றல் ஆய்வகம் போன்ற தனிச்சிறப்பு மிக்க அமைவிடங்களில் சுமார் 9000 மீட்டர் அல்லது 3000 அடி ஆழத்திலிருந்து கடல்நீர் பூமியின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகிறது. ஆய்வு, வணிகம் மற்றும் முன் தயாரிப்பு வணிக நடவடிக்கைகள் முதலிய காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. போதுமான துணை வெப்ப ஆழத்தில் கடல் நீரின் வெப்பநிலை வேற்பாடுகளை அளவிட்டு விவரிக்கவும் பொதுவாக ஆழ் கடல் நீர் பயன்படுத்தப்படுகிறது.

ஆழ் கடல் நீரை பூமிக்கு மேலே கொண்டு வரும்பொழுது அதை பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தமுடியும். இந்நீரின் மிகமுக்கியமான பயன்படும் சொத்து அதன் வெப்பநிலை ஆகும். பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காற்று மற்றும் நீர் ஆகியன 3 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையைக் கொண்டுள்ளன. ஆழ் கடல் நீர் மற்றும் மேற்பரப்பு நீர் இரண்டிற்குமிடையிலான இவ்வெப்பநிலை வேறுபாடு இவற்றிடையே உள்ள ஆற்றல் வேறுபாட்டையும் குறிப்பாகத் தெரிவிக்கிறது. இந்த ஆற்றல் மாறுவீதத்தைக் கட்டுப்படுத்தி மனிதர்களால் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் திறம்பட பயன்படுத்தமுடியும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமலும், இயற்கை வழிமுறைகள் மூலமாகவும் ஆழ் கடல் நீர் ஆதாரங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவரமுடியுமானால், தற்போதைய புதைபடிவ எரிபொருள் ஆதாரங்களின் மூலம் பெறப்படும் ஆற்றலை விட தூய்மையான மற்றும் புதுமையான ஆற்றல் உற்பத்திக்கு அடிப்படையாக ஆழ் கடல் நீர் விளங்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

காற்றைக் குளிர்விக்க ஆழ் கடல் நீரைப் பயன்படுத்துவது குளிர்ந்த நீரின் ஓர் எளிய பயன்பாடாகும். பாரம்பரியமாக குளிர்பதனிகளில் உபயோகிக்கப்படும் அமுக்கிகளுக்காகச் செலவழியும் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறது. மற்றொரு பயன்பாடு விலையுயர்ந்த உப்பு நீக்கும் பதிலாக இருக்க முடியும். குளிர்ந்த நீரில் ஈரப்பதம் மிக்க காற்று, ஒடுக்க முடிவுகள் சூழப்பட்ட ஒரு குழாய் கடந்து செல்லும் போது. ஆவி தூய நீர், மனிதர்கள் குடிக்க அல்லது பயிர் பாசனத்திற்கு ஏற்றது. இறுதியாக, பெருங்கடல் வெப்ப ஆற்றல் மாற்றத்திற்காக என்ற தொழில்நுட்பத்தை வழியாக, வெப்பநிலை வேறுபாடு மின்சாரம் மாறியது முடியும். உப்பகற்றல் எனப்படும் உப்பு மற்றும் பிற கனிமங்கள் கலந்த நீரிலிருந்து உப்பை நீக்கும் செயல்முறைக்கு மாற்றாக ஆழ் கடல் நீரைப் பயன்படுத்தலாம். செயல்முறை உப்பகற்றல் எனப்படும். ஈரக்காற்று சூழ்ந்த குழாய்களின் வழியாகக் குளிர்ந்த நீர் செல்லும்போது ஆவிசுருங்குதல் நிகழ்கிறது. இந்நிகழ்வால் கிடைக்கும் தூய்மையான நீர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற நீராக உள்ளது. வெப்பநிலை மாறுநிலையைப் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பத்தால் கடல் வெப்ப ஆற்றல் மாற்றம் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ocean Stratification". The Climate System. Columbia Univ. Archived from the original on 29 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Hidden Meltdown of Greenland". Nasa Science/Science News. NASA. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
  3. "Temperature of Ocean Water". UCAR. Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்_கடல்_நீர்&oldid=3543134" இலிருந்து மீள்விக்கப்பட்டது