ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்)

ஆவதெல்லாம் பெண்ணாலே 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]

தாம்பத்யம் என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி, கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தர் வசனம் எழுதியிருந்தார்.

பாடல்கள் தொகு

கவிஞர்கள் புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற என் அன்பில் கலந்தாயோ என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2018-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181117020710/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965.asp. பார்த்த நாள்: 2022-04-14. 

வெளி இணைப்புகள் தொகு

யூடியூபில் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் (திரைப்படம் பற்றிய விபரங்கள் அடங்கிய பாட்டுப் புத்தக முன் அட்டை இந்தக் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.)