ஆவாரம் பூ (திரைப்படம்)

1992 பரதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம்

ஆவாரம் பூ (Aavaram poo) என்பது 1992 இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் வினீத், நந்தினி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கே. ஆர். என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூன் 5, 1992 ம் திகதி இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1980 இல் மலையாள மொழியில் வெளிவந்த "தகரா" எனும் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும்.[1][2][3]

ஆவாரம்பூ
இயக்கம்பரதன்
தயாரிப்புகே. ஆர்.
கதைபிரசண்ணா குமார்
(வசனங்கள்)
திரைக்கதைபத்மராஜன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்கே. ஆர். என்ரபிறைசஸ்
வெளியீடுசூன் 5, 1992 (1992-06-05)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

சக்கரை (வினித்) புத்திசுவாதீனம் குறைந்த அனாதை . அவனுடைய வெகுளித்தனத்தை அக்கிராமமக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தனர். சக்கரை அவ்வூரின் தேவரிடம் (நாசர்) பணிபுரிந்து வந்தான். தேவருக்கு இரு மனைவியர். முதல் மனைவியான லட்சுமியுடன் ஏற்பட்ட பிரச்சனைகளிற்கு பிறகு வேறொரு பெண்ணை (சுலக்சனா) திருமணம் செய்திருந்தார். சக்கரை தேவரின் மகளான தாமரையுடன் (நந்தினி) மென்மையான போக்கிலும் வெகுளித்தனமாகவும் பழகி வந்தான். தாமரையினால் அவமானப்பட்ட ஆசாரி (கவுண்டமணி) சர்க்கரையை மூளைச்சலவை செய்தான். அதனால் சர்க்கரை தாமரையுடன் உடல்ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான். சில காலங்களுக்கு பிறகு தேவருக்கு இவர்களுடைய உறவு குறித்து தெரியவர தாமரைக்குக் குடிகாரனான செங்கோடனுடன் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தார். அதன்பின்னர் சக்கரையுடன் தாமரை சேர்கிறாளா என்பது இறுதிக்கதையாகும்.

நடிகர்கள்தொகு

  • வினித்-சர்க்கரை
  • நந்தினி-தாமரை
  • நாசர்-தேவர்
  • கவுண்டமணி-ஆசாரி
  • சுலக்சனா-தேவரின் இரண்டாவது மனைவி
  • வல்சரா மேனன்-லட்சுமி , தேவரின் முதல் மனைவி
  • அனு ஆனந்த்-பாலு
  • இந்திரஜித்
  • சீனா அந்தோணி
  • விசித்ரா
  • மாஸ்டர் தீபக்
  • பேபி ஸ்ரீதேவி
  • சார்மிலி-பாப்பா
  • பயில்வான் ரங்கநாதன்-பயில்வான்
  • பரதன் (சிறப்புத்தோற்றம்)

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 1992 ஆம் ஆண்டு இத்திரைப்படத்திற்கான இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் உள்ள 6 பாடல்களை புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[4][5][6]

மேற்கோள்கள்தொகு

  1. "Filmography of avarampoo". cinesouth.com. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Aavaram Poo (1992) Tamil Movie". spicyonion.com. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Aavarampoo". entertainment.oneindia.in. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Avarampoo - Raaga". raaga.com. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Avarampoo : Tamil Movie". hummaa.com. 25 October 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Aavaram Poo Songs". oosai.com. 10 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-02 அன்று பார்க்கப்பட்டது.