ஆவிட் (Ovid) என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ (Publius Ovidius Naso, மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு உரோமக் கவிஞர் ஆவார். இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன.

ஆவிட்
Ovid
"ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். நூரம்பர்க் குரோனிக்கிள், 1493ன் இல் இடம்பெற்றது.
"ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். நூரம்பர்க் குரோனிக்கிள், 1493ன் இல் இடம்பெற்றது.
பிறப்புபப்ளியசு ஆவிடசு நாசோ
மார்ச் 20, கிமு 43
சுல்மோ, ரோமக் குடியரசு
இறப்பு17 AD
டோமிஸ் (present Constanţa), சித்தியா மைனர், கிரேக்கக் குடியேற்றம்
தொழில்கவிஞர்

தாக்கங்கள்தொகு

வேர்ஜில்

பின்பற்றுவோர்தொகு

தாந்தே அலிகியேரி, ஜெஃப்ரி சோசர், ஜான் மில்ட்டன், வில்லியம் ஷேக்ஸ்பியர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவிட்&oldid=2196271" இருந்து மீள்விக்கப்பட்டது