ஆவின் முறைகேடு

ஆவின் முறைகேடு அல்லது ஆவின் பால் கலப்பட மோசடிAavin milk scam) என்பது பல்வேறு மாவட்டங்க்ளில் இருந்து சென்னைக்கு விநியோக வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ஆவின் பாலை  செல்லும் வழியில் திருடி அதற்குபதில் நீரைக் கலந்த குற்றத்தைக் குறிப்பிடுவது ஆகும். ஆவினானதுதமிழ்நாட்டு மாநில அரசின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகும்.   இந்த முறைகேடானது 2014 ஆகத்து 19 அன்று நாராயணபுரம் என்ற இடத்தில் இருந்து காலி பால்குவளைகளைக் கொண்டுவந்த மூடுந்தை காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரித்தபோது வெளியானது. இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து மாநிலப் பால்வளத்துறை அமைச்சர் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஒன்பது ஆவின் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடுகளில் பிரதானமாக செயல்பட்டவராககருதப்பட்ட வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளின்  தொடக்க மதிப்பீட்டாக மொத்தம் 10 லட்சம் லிட்டர்களில் ஒரு சதவீதமாக கணக்கிடப்பட்டது. இது நாள் ஒன்றுக்கு 23 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டது.

பின்னணி தொகு

தமிழ்நாட்டில் பால் வளத்துறையானது  1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடும் அதன் அதிகார எல்லைக்குள் வந்தது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN)  1981 பெப்ரவரி 1 அன்று முதல் பதிவு செய்யப் பட்டு இயங்கி வருகின்றது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இது ஆவின் என்றும் அழைக்கப்படுகிறது. மாநிலத்தின் பால் பண்ணை பிரிவுகளானது மாநிலம், மாவட்டம் மற்றும் கிராமம் ஆகிய மூன்று அடுக்குகளாகச் செயல்படுகிறது. [1] இந்தியாவில் தானியங்கி பால் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள  சில நிறுவனங்களில் ஆவினும் ஒன்று ஆகும்.[2] சென்னையில் பால் மற்றும் பால் பொருட்களான, நெய், வெண்ணெய், பாலால் செய்யப்பட்ட இனிப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் விற்பனையகங்களை ஆவின் நடத்திவருகிறது. ஒவ்வொரு ஆண்டும், நிறுவனமானது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.[3] மாநிலத்தில் நியாயமான குறைந்த விலையில் உயர் தரமான பாலை வழங்கிவருகிறது.[4]

முறைகேடு தொகு

ஆவினானது பல்வேறு மாவட்ட கூட்டுறவு ஒன்றியல்களில் இருந்து தொட்டி சரக்குந்துகள் வழியாக சேகரிக்கிறது. ஆவின் பாலை எடுத்துச் செல்லும் தொட்டி சரக்குந்துகளை குத்தகை முறையில் இயக்கிவரும் வைத்தியநாதன் என்னும் நபர், திண்டிவனம் புறநகர்ப் பகுதியில் உள்ள கோவிந்தபுரத்துக்கு ஆவின் பல் வண்டிகளை திருப்பிவிட்டதாக நம்பப்படுகிறது. 2014 ஆகத்து 19 அன்று திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை என்ற இடத்தில் சென்னை செல்லும் ஆவின் பால் சரக்குந்துகளை நிறுத்தி, பாலை திருடிவிட்டு. திருடிய பாலுக்கு சமமாக தண்ணீரை கலந்து கொண்டிருந்தபோது, வெள்ளிமேடு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதில் ஈடுபட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில்  நூற்றுக்கணக்கான பால் தொட்டி வண்டிகளை  (ஒவ்வொன்றும் 12,000 லிட்டர் பால் கொண்டவை) திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சென்று, முத்திரையிடப்பட்ட வண்டியில் இருந்து 2,000 லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு அதே அளவு தண்ணீரை அதில் கலந்ததாக தெரியவந்தது. இந்த வண்டிகளின் உரிமையாளர் அதிமுக பிரமுகரான என். வைத்தியநாதன் என்பவராவார். இவ்வாறு திருடப்பட்ட பாலானது தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். விசாரணையில் இந்த முறைகேடு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துள்ளது என்று தெரியவந்தது. வைத்தியநாதன், 1987 ஆம் ஆண்டில் ஆவினுடனான வணிகத் தொடர்பை ஆரம்பித்து, அதன்பின் ஆவின் பாலை ஓப்பந்தமுறையில் கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான சரக்குந்துகளின் உரிமையாளராக உருவானார். பாலின் தரத்தைப் பரிசோதிக்கக்கூடிய ஆவின் அதிகாரிகள் இவருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[5]இதனால் ஆவினுக்கு ஏற்பட்ட இழப்பு என தொடக்க மதிப்பீட்டாக மொத்தம் 10 லட்சம் லிட்டரில் ஒரு சதவீதமாக கணக்கிடப்பட்டது. இது நாள் ஒன்றுக்கு 23 லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட சரக்குந்து உரிமையாளரான வைத்தியநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.[6]

விசாரணை தொகு

இந்த வழக்கு விசாரணையானது தமிழ்நாடு காவல்துறையிடமிருந்து சிபி-சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நான்கு குழுக்கள் உள்ளிட்ட இருபத்தோரு குழுக்கள் ஆவினின் பல்வேறு பிரிவுகளில் சோதனைகளை நடத்தின.[7] அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் சங்கங்களின் பொது மேலாளர்களிடம் கலப்படம் பற்றி விசாரிக்க சிபி-சி.ஐ.டி. அழைப்பாணை அனுப்பியது.[8][9]

பின்விளைவுகள் தொகு

வேலூர் பால் ஒன்றியம் வெளி சரக்குந்துகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டது, மற்றும் ஆவினானது, வேலூர் நகரிலிருந்து தனது சொந்த வாகனங்களை பாலைக் கொண்டுவர பயன்படுத்தத் தொடங்கியது. ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் விவசாய சங்கங்கள் இந்த முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென கோரினர். மேலும் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் வரையறுத்த வழிகாட்டுதல்களை ஆவின் மீறிய செயல்களில் ஈடுபட்டதால், நிறுவனத்தின் செயல்பாட்டை சீர்செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.[10] இந்த முறைகேடு குற்றம் சாட்டப்பட்ட வைத்தியநாதனுடன் நெருங்கிய தொடர்புபடுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் தனது பதவியை இழந்தார்.[11]

குறிப்புகள் தொகு

  1. "Citizen charter". Aavin. 2011. Archived from the original on 16 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
  2. Dhotre, Meenal (2010). Channel Management and Retail Marketing. Mumbai: Himalaya Publishing House. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789350432488. 
  3. Ray,, Krishnendu Srinivas Tulasi (2012). California Studies in Food and Culture, Volume 34: Curried Cultures: Globalization, Food, and South Asia. CA, USA: University of California Press. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520952249. 
  4. Van Hollen, Cecilia (April 2013). Birth in the Age of AIDS : Women, Reproduction, and HIV/AIDS in India. Palo Alto, CA: Stanford University Press. பக். 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780804786140. 
  5. V.P., Raju (27 September 2014). "Aavin rip off was well planned". Chennai: Deccan Chronicle. http://www.deccanchronicle.com/140927/nation-crime/article/aavin-rip-was-well-planned. பார்த்த நாள்: 1 October 2014. 
  6. "Contractor Remanded in Aavin Scam". The Express News Service (Villupuram: The New Indian Express). 27 September 2014. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Contractor-Remanded-in-Aavin-Scam/2014/09/22/article2443244.ece. பார்த்த நாள்: 1 October 2014. 
  7. T., Ramakrishnan (27 September 2014). "Van seizure blows the lid off Aavin scam". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/van-seizure-blows-the-lid-off-aavin-scam/article6451108.ece. பார்த்த நாள்: 27 September 2014. 
  8. "Cops Grill Aavin GMs in Milk Adulteration Case". Express News Service (Chennai: The New Indian Express). 13 September 2014. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Grill-Aavin-GMs-in-Milk-Adulteration-Case/2014/09/13/article2428731.ece. பார்த்த நாள்: 1 October 2014. 
  9. "Two held in Aavin scam". Deccan Herald (Chennai). 13 September 2014. http://www.deccanchronicle.com/140920/nation-current-affairs/article/two-held-aavin-scam. பார்த்த நாள்: 1 October 2014. 
  10. "Plea for CBI probe into Aavin scam". Coimbatore: The Hindu. 1 October 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbi-probe-into-aavin-scam/article6463348.ece. பார்த்த நாள்: 1 October 2014. 
  11. S., Karthick (21 September 2014). "PMK demands special investigation into Aavin milk adulteration scam". The Times of India (Chennai). http://timesofindia.indiatimes.com/city/chennai/PMK-demands-special-investigation-into-Aavin-milk-adulteration-scam/articleshow/43096390.cms. பார்த்த நாள்: 1 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவின்_முறைகேடு&oldid=3543121" இலிருந்து மீள்விக்கப்பட்டது