ஆஷா படேல்
ஆஷா படேல் (Asha patel) (6 செப்டம்பர் 1977-12 டிசம்பர் 2021) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.
ஆஷா படேல் | |
---|---|
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2017–2021 | |
முன்னையவர் | நாராணன்பாய் படேல் |
தொகுதி | உஞ்சா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1977 |
இறப்பு | 12 திசம்பர் 2021 அகமதாபாத், குஜராத், இந்தியா | (அகவை 44)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | ஹேமச்சந்ராயா வடக்கு குஜராத் பல்கலைக்கழகம் |
வேலை | வணிகம் மற்றும் விவசாயம் |
வாழ்க்கை வரலாறு
தொகுகுஜராத் மாநிலத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள விசோல் கிராமத்தைச் சேர்ந்த இவர் துவாரகதாஸ் - ஹிராபென் இணையரின் மகள் ஆவார்.[1]
1997 ஆம் ஆண்டில் பி. எஸ்சி படித்த இவா், 2000 ஆம் ஆண்டில் ஹேமச்சந்திரச்சார்யா வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் உன்ஜாவில் உள்ள உமியா ஆலயத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.
2015 இல் நடைபெற்ற பட்டிதார் சமூகத்தினர் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றார்.[2]
2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் உஞ்சா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2019 இல் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]
12 திசம்பர் 2021 அன்று தீவிர டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அகமதாபாது நகரில் தனது 44 ஆம் வயதில் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதிருமணம் செய்து கொள்ளாத இவருக்கு மூன்று மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரரும் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Patel Ashaben Dwarkadas(Indian National Congress(INC)):Constituency- UNJHA(MAHESANA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ 2.0 2.1 "BJP Unjha MLA dies following dengue-related complications" (in en). The Indian Express. 2021-12-12. https://indianexpress.com/article/cities/ahmedabad/bjp-unjha-mla-dies-7668832/."BJP Unjha MLA dies following dengue-related complications". The Indian Express. 12 December 2021. Retrieved 12 December 2021.
- ↑ "Asha Patel joins Gujarat BJP, says 25 more Congress MLAs unhappy". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Gujarat: Narayan Lallubhai Patel's reign ends in Unjha APMC, Asha Patel bags 10 seats". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ 3 Congress MLAs quit party in Gujarat in last 4 days: Turmoil in Grand Old Party?