ஆஷ்டன் குட்சர்
ஆஷ்டன் குட்சர் (Ashton Kutcher, பிறப்பு: பிப்ரவரி 7, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விளம்ப்பர நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களும் நடித்துள்ளார்.[1][2][3]
ஆஷ்டன் குட்சர் | |
---|---|
பிறப்பு | ஆஷ்டன் ஆஷ்டன் குட்சர் பெப்ரவரி 7, 1978 ஐக்கிய அமெரிக்கா, |
பணி | நடிகர், தயாரிப்பாளர், விளம்ப்பரநடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | டெமி மூர் (2005–2013) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் நடிகை டெமி மூரை 2003ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 24ம் திகதி 2005ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தார்கள்.
திரைப்பட வாழ்க்கை
தொகுஇவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் உள்ளிட்ட 21 திரைப்படங்களில் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு ஜோப்ஸ் என்ற திரைப்படத்தில் ஸ்டீவ் ஜோப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1999 | கமிங் சூன் | |
2000 | டவுன் டூ யூ | |
2000 | ரெய்ண்டீர் கேம்ஸ் | |
2000 | டூடு, வேர் இஸ் மை கார்? | |
2001 | டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் | |
2003 | ஜஸ்ட் மேரீடு | |
2003 | மை பாஸ்’ஸ் டாட்டர் | |
2003 | சீப்பர் பை த டசன் | பெயர் குறிப்பிடப்படாதது |
2004 | தி பட்டர்பிளை எபெக்ட் | |
2005 | கெஸ் ஹூ | |
2005 | எ லாட் லைக் லவ் | |
2006 | பாபி | |
2006 | தி கார்டியன் | |
2006 | ஓபன் சீஸன் | குரல் |
2008 | வாட் ஹேப்பண்டு இன் வேகஸ் | |
2009 | ஸ்ப்ரெட் | |
2009 | பெர்சனல் எபெக்ட்ஸ் | |
2010 | வேலண்டைன்ஸ் டே | |
2010 | கில்லர்ஸ் | |
2011 | நோ ஸ்டிரிங்க்ஸ் அட்டாச்டு | |
2011 | நியூ இயர்ஸ் ஈவ் | |
2013 | ஜோப்ஸ் |
சின்னத்திரை
தொகுஇவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் என்ற தட் '70 ஸ் ஷோ தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரை தொடர்ந்து ஜஸ்ட் ஷூட் மீ, ரோபோட் சிக்கன், மென் அட் வொர்க் உள்ளிட்ட 8 தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது டூ அண்டு எ ஹாஃப் மென் என்ற தொடரில் நடித்துகொண்டு இருக்கின்றார், இந்த தொடர் மாபெரும் வெற்றி தொடர் ஆகும்.
தொடர்கள்
தொகு- 1998–2006 - தட் '70 ஸ் ஷோ
- 2001 - ஜஸ்ட் ஷூட் மீ
- 2002 - கிரவுண்டடு ஃபார் லைஃப்
- 2003–2007, 2012 - பங்குடு
- 2005 - ரோபோட் சிக்கன்
- 2008 - மிஸ் கைடடு
- 2011 – டூ அண்டு எ ஹாஃப் மென் - ஒளிபரப்பில்
- 2013 - மேன் அட் வோர்க்
ஒரு தயாரிப்பாளராக
தொகுஇவர் 2002ம் ஆண்டு பங்குடு என்ற தொடரை முதல் முதலில் தயாரித்தார். அதை தொடர்ந்து, பியூட்டி அண்டு த ஜீக், கேம் ஷோ இன் மை ஹெட், ரூம் 401 உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு Forever Young என்ற தொடரை தயாரித்துள்ளார் இந்த தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Births— Mercy", "Statistics", The Gazette (Cedar Rapids, IA), February 8, 1978, p.2A ("Feb. 7... Mr. and Mrs. Larry Kutcher, 824 Daniels St. NE, twin sons")
- ↑ "Interview With Ashton Kutcher — Part 2". America's Intelligence Wire. September 6, 2006. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-18727013_ITM.
- ↑ Stated on The Tonight Show with Jay Leno, August 12, 2003