ஆஸ்திரால் தீவுகள்
துகாவா பாயி (Tuha'a Pae, அல்லது ஆஸ்திரால் தீவுகள் (Austral Islands, பிரெஞ்சு மொழி: Îles Australes அல்லது Archipel des Australes), என்பது தென்பசிபிக்கில் உள்ள பிரெஞ்சு பொலினீசியாவின் தென்பகுதியில் உள்ள தீவுகள் ஆகும். புவியியல் படி, இத்தீவுகள் இரண்டு வெவ்வேறு தீவுக் கூட்டங்கள் உள்ளன, அவையாவன வடமேற்கே துபுவாய் தீவுகள் (பிரெஞ்சு மொழி: Îles Tubuaï), மற்றும் தென்கிழக்கே பாஸ் தீவுகள் (பிரெஞ்சு மொழி: Îles basses) ஆகியனவாகும். இத்தீவுகளின் மக்கள் பந்தான் நார் நெசவிற்குப் பேர் போனவர்கள் ஆவர்.[2] மரியா, மரோத்திரி ஆகிய தீவுகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு ஏற்றவையல்ல. இவற்றில் பல தீக்குழிகள் உள்ளன. ஆஸ்திரால் தீவுகளின் மக்கள்தொகை 6,300 ஆகும், இவர்கள் 150 சதுரகிமீ நிலப்பரப்பில் வாழ்கின்றனர். ஆஸ்திரால் தீவுகளின் தலைநகர் துபுவாய் ஆகும்.
உள்ளூர் பெயர்: Îles Australes | |
---|---|
ஆஸ்திரால் தீவுகளின் கொடி | |
புவியியல் | |
அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
தீவுக்கூட்டம் | பொலினீசியா |
மொத்தத் தீவுகள் | 7 |
முக்கிய தீவுகள் | துபுவாய், ரூருட்டு, ராய்வாவே, ராப்பா இத்தி |
பரப்பளவு | 148 km2 (57 sq mi) |
நிர்வாகம் | |
பிரான்சு | |
Overseas collectivity | பிரெஞ்சு பொலினீசியா |
பெரிய குடியிருப்பு | ரூருட்டு (மக். 2,322) |
மக்கள் | |
மக்கள்தொகை | 6,820[1] (2012) |
அடர்த்தி | 43 /km2 (111 /sq mi) |
இத்தீவுகளில் உள்ள ஒரேயொரு செயல்நிலை எரிமலை மெக்டொனால்ட் கடல்நிலம் ஆகும் (40மீ ஆழம்).[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Institut Statistique de Polynésie Française (ISPF). "Recensement de la population 2012" (in பிரெஞ்சு). Archived from the original (PDF) on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
- ↑ "Australs Resorts". Tahiti Travel Planners. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2014.
- ↑ Gillespie, Rosemary G.; David A. Clague (2009). Encyclopedia of Islands. Berkeley, CA: University of California Press. p. 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520256491. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Official site
- Official site, municipalities with maps பரணிடப்பட்டது 2006-11-25 at the வந்தவழி இயந்திரம்
- Oceandots.com satellite images at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 23 திசம்பர் 2010)