ஆ.ரா. அகேலா
ஆனந்த் ராவ் ஆ.ரா. அகேலா (Anant Rao "A. R." Akela) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] கவிஞர், நாட்டுப்புற பாடகர் மற்றும் பதிப்பாளர் என பன்முகங்களில் இவர் இயங்குகிறார்.[2][3][4]
ஆ.ரா. அகேலா A. R. Akela | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1960 அலிகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980- முதல் |
18 வயதில் எழுதக் கற்றுக்கொண்ட அகேலா, கன்சிராமின் வாழ்க்கையைப் பற்றி 12 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை மலிவு விலையில் வெளியிட்டார். அகேலா முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு மகாபரிநிர்வான் திவாசு எனப்படும் அம்பேத்கார் நினைவு நாள் நிகழ்ச்சிக்காக மும்பைக்கு வந்தார். அதன் பிறகு இவர் ஒவ்வோர் ஆண்டும் வருகை தருகிறார்.
பதிப்பகம்
தொகுஆனந்த் சாகித்ய சதன் என்ற பதிப்பகத்தை அகேலா நடத்தி வருகிறார்.[5] பெரும்பாலும் இவரது புத்தகங்களை சுயமாக வெளியிடுகிறார். அம்பேத்கர், கன்சிராம், சாகூ மகாராச், புத்தர், பெரியார் போன்ற புத்தகங்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "How independent publishers ensure Ambedkarite literature continues to reach the masses". TwoCircles.net. 2019-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ "Tehelka:: Free. Fair. Fearless". Archive.tehelka.com. 19 January 2008. Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.
- ↑ Narayan, Badri (2006). Women Heroes and Dalit Assertion in North India: Culture, Identity and Politics. New Delhi: Sage Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-3537-7. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.
- ↑ Badri Narayan (3 May 2012). "A candle in the dark". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.
- ↑ Gupta, K.r (2004). Directory of Publishers and Booksellers in India. Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0400-6.