இக்கின்பாதம்ஸ்

இக்கின்பாதம்ஸ் (Higginbotham's) இந்தியாவின் சென்னையிலுள்ள ஒரு புத்தக நிலையம். இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக நிலையம் இது.[1][2][3][4][5] இதன் கிளைக் கடைகள் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் உள்ளன.[4]

ஹிக்கின்பாதம்ஸ், சென்னை கிளை

வரலாறு

தொகு

ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்டது இக்கின்பாதம்ஸ்.[6] 1860-களில் தற்போதுள்ள பெரிய கட்டடத்திற்கு விற்பனையை மாற்றினார் ஏபெல் யோசுவா. 1891 இல் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சி.எச். இக்கின்பாதம்சு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.[6] 1921 -ஆம் ஆண்டு அசோசியேட்டட் பப்ளிசர்சின் ஜான் ஓக்‌ஷாட் ராபின்சன் என்பவரால் வாங்கப்பட்டு பின்னர் அமால்கமேசன்சு குழுமத்தால் அசோசியேட்டட் பப்ளிசர்சு 1945 இல் வாங்கப்பட்டதிலிருந்து இன்று வரை அக்குழுமத்திடமே இருந்து வருகிறது.[7] 1929 -இலேயே 400 ஆட்கள் வேலை செய்து வந்துள்ளனர் இந்நிலையத்தில்.

1990கள் வரை இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக்கடையாக விளங்கியது.[2][4] அண்ணா சாலையில் உள்ள இதன் முதன்மைக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அங்கு பெரும் பல்மாடி வணிக வளாகம் அமைக்க முயன்ற முயற்சி தோல்வியுற்றது.[3] 1989ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தக் கட்டிடத்தின் பராமரிப்பு முகப்புத்தோற்றத்தின் முந்தைய வனப்பை மீட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. The Tribune - Spectrum - 2nd para
  2. 2.0 2.1 Khan, A. D. L. (October 23, 2005). "Much more than a bookstore". The Tribune:Spectrum. http://www.tribuneindia.com/2005/20051023/spectrum/main2.htm. பார்த்த நாள்: 2008-10-20. 
  3. 3.0 3.1 3.2 Muthiah, S. (August 13, 2003). "Printer's ink on Mount Road". The Hindu:Metro Plus இம் மூலத்தில் இருந்து 2008-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081205080936/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/13/stories/2003081300140300.htm. பார்த்த நாள்: 2008-10-20. 
  4. 4.0 4.1 4.2 Pradhan, Swapna (2007). Retailing Management: Text and Cases. Tata McGraw-Hill. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0070620202, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070620209.
  5. Madras Rediscovered, Pg 81
  6. 6.0 6.1 "Printers' ink on Mount Road - The Hindu - Wednesday, Aug 13, 2003". Archived from the original on பிப்ரவரி 21, 2010. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 14, 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  7. Madras Rediscovered, Pg 52
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கின்பாதம்ஸ்&oldid=4152617" இலிருந்து மீள்விக்கப்பட்டது