இக்பால் நாள்

இக்பால் நாள் (Iqbal Day) என்பது முகமது இக்பாலின் பிறந்த நாளான நவம்பர் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வரை பாக்கித்தானின் அனைத்து மாகாணங்கள் மற்றும் கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக இருந்தது. [1][2] கவிஞரும் தத்துவஞானியுமான இக்பால், பாக்கித்தான் இயக்கத்திற்கு பெரும் உத்வேகமாக இருந்தார். [3]

இக்பால் நாள்
Iqbal Day
یوم اقبال
அதிகாரப்பூர்வ பெயர்இக்பால் நாள்
பிற பெயர்(கள்)இயோம்-இ வெலாதாட்-இ முகம்மது இக்பால்
கடைபிடிப்போர் பாக்கித்தான்
நாள்9 நவம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்

முகம்மது இக்பாலின் வரலாறு தொகு

"கிழக்கின் கவிஞர்" [3][4]என்று அழைக்கப்பட்ட அல்லாமா முகம்மது இக்பாலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதியை அனைத்து மாகாணங்களிலும் இக்பால் நாளாக ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. இக்பால் 1877 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று தற்போது பாக்கித்தானில் உள்ள பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் பிறந்தார். இவர் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லாகூரில் இறந்தார். பாக்கித்தான் அரசு இக்பாலை ஒரு தேசியக் கவிஞராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. [5][6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_நாள்&oldid=3658842" இருந்து மீள்விக்கப்பட்டது