இசான் சந்திர மாணிக்கியா

திரிபுராவின் ஆட்சியாளர்

இசான் சந்திர மாணிக்கியா (Ishan Chandra Manikya) 1849 முதல் 1862 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். [1] [2]

வரலாறு

தொகு

இவர் கிருஷ்ண கிசோர் மாணிக்கியாவின் மகனாவார். இவரது மகன் நபத்விப்சந்திர தேவ் பர்மன் ஒரு பிரபலமான இந்திய சித்தார் கலைஞரும் மற்றும் துருபத் பாடகரும், இசையமைப்பாளருமான எஸ். டி. பர்மனின் தந்தையும் , மற்றொரு இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் தாத்தாவும் ஆவார்.

இவர் மணிப்பூரி அரச வம்சாவளியைச் சேர்ந்த மொய்ராங்தேமின் முக்தவலி, கெய்ஷாமின் சானு ஜதீசிவரி மற்றும் குமந்தேமின் சந்திரேசுவரி என மூன்று ராணிகளை மணந்தார். [1] .862 இல் இவர் இறந்த பிறகு, இவரது சொந்த மகன்களுக்குப் பதிலாக இவரது சகோதரர் வீர் சந்திர மாணிக்கியா அரியணை ஏறினார்.

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Sanajaoba, Naorem, ed. Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Vol. 4. Mittal Publications, 1988.
  2. Kingdom of Tripura - University of Queensland
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசான்_சந்திர_மாணிக்கியா&oldid=3801964" இலிருந்து மீள்விக்கப்பட்டது