மாணிக்ய வம்சம்

இந்திய துணைக் கண்டத்தின் வடகிழக்கில் ஒரு பெரிய பகுதியைக் கட்டுப்படுத்திய ஓர் வம்சம்

மாணிக்கிய வம்சம் ( Manikya dynasty ) என்பது துவிப்ரா இராச்சியத்தின் ஆளும் வீடாக இருந்தது. பின்னர் சுதேச திரிபுரா இராச்சியமாகவும், தற்போது இந்திய மாநிலமான திரிபுராவாகவும் ஆனது. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, வம்சம் அதன் உச்சத்தில் இந்திய துணைக் கண்டத்தின் வடகிழக்கில் ஒரு பெரிய பகுதியைக் கட்டுப்படுத்தியது. பிரித்தானிய பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்த பிறகு, வங்காளதேசத்தில் உள்ள "கொமில்லா" மற்றும் "சிட்டகாங் மலைப்பாதைகள்" இராச்சியத்தின் சில பகுதிகளை இழந்தது.

துவிப்ரா இராச்சிய மன்னர் இராசதர் மாணிக்கியாவின் நாணயங்கள், ஆண்டு (1586-1599)
துவிப்ரா இராச்சிய மன்னர் இரண்டாம் விசய மாணிக்கியா காலத்து நாணயங்கள், ஆண்டு, 1532-1564
திரிபுரா சமஸ்தானத்தின் வரைபடம், ஆண்டு 1909

1761 ஆம் ஆண்டில், நிலப்பிரபுத்துவவாதிகளாக இருந்த இவர்கள் ஒரு சுதேச அரச ஆட்சியாளர்களாக மாறினார்கள். இருப்பினும் மாணிக்கியர்கள் 1949 வரை இப்பகுதியின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். பின்னர், இது இந்தியாவுடன் இணைந்தது.

வரலாறு

தொகு

திரிபுராவின் அரசர்களின் சரித்திரமான ராஜ்மாலா சந்திர குலத்திலிருந்து ஒரு வம்சாவளியைக் கண்டுபிடித்தது. வங்காள சுல்தானால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பிறகு முதல் மாணிக்கிய அரசர் என்று கூறப்படும் இரத்னா பா என்ற மன்னனின் ஏற்றம் வரை திரிபுராவின் 185 மன்னர்களின் உடைக்கப்படாத வரிசையாகும். [1] இருப்பினும், ஆரம்ப மாணிக்கிய ஆட்சியாளர்களின் வம்சாவளி மற்றும் காலவரிசையில் ராஜ்மாலா தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக இப்போது நம்பப்படுகிறது. [2] முதல் வரலாற்று மாணிக்கியா உண்மையில் மகா மாணிக்கியா, [3] 1400 களின் முற்பகுதியில் அண்டை பழங்குடியினர் மீது ஆதிக்கம் செலுத்திய பின்னர் இராச்சியத்தை நிறுவிய திரிபுரி தலைவரானார் என்று நாணயவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. [4] இந்த மன்னர் பின்னர் "மாணிக்கியா" என்ற பட்டத்தை வங்காளத்தின் மீதான வரலாற்று வெற்றியின் நினைவாகப் பெற்றார். அவருடைய சந்ததியினரால் இந்தப் பெயர் தொடரப்பட்டது.[5]

இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானியர்களின் ஆட்சியின் போது, மாணிக்கிய மன்னர், கொமில்லா மற்றும் சிட்டகாங் மலைப் பகுதிகள் போன்ற சில பகுதிகளை ஆங்கிலேயர்களிடம் இழந்தார். அவை அவர்கள் வெளியேறிய பிறகு மீண்டும் பெறப்படவில்லை.

இராணுவ வெற்றி

தொகு

மகா மாணிக்கியாவின் ஆரம்பகால வாரிசுகள் கணிசமான இராணுவ வெற்றியை அடைந்தனர். வங்காளம், அசாம் மற்றும் மியான்மரின் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். திரிபுரா 16 ஆம் நூற்றாண்டில் தான்ய மாணிக்கியா மற்றும் இரண்டாம் விசய மாணிக்கியா போன்ற முக்கிய மன்னர்களின் கீழ் அதன் உச்சத்தை அடைந்தது. [6] அதன் நிலங்கள் வடக்கே காரோ மலைகள் முதல் தெற்கே வங்காள விரிகுடா வரை நீண்டிருந்தது. ஒரு இந்து இராச்சியத்தின் மன்னர்களாக, மாணிக்கியர்கள் வங்காளத்தின் தொடர்ச்சியான முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் ஒரு போட்டியை வளர்த்துக் கொண்டனர். 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு முன்பு சுல்தான்கள், ஆளுநர்கள் மற்றும் நவாப்களுடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். முகலாய சக்தி குறைந்து போனதால், வங்காளத்துடனான விரோதம் மீண்டும் வெடித்தது. இது மாணிக்கியர்களை உதவிக்காக முதலில் ஆங்கிலேயர்களை அணுகத் தூண்டியது. 1761 ஆம் ஆண்டில், திரிபுரா பிரித்தானிய செல்வாக்கிற்கு அடிபணிந்து, சுதேசப் பாதுகாவலராக மாறியது. இருப்பினும் இப்பகுதியின் கட்டுப்பாடு மாணிக்கிய வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது. [7]

1870 ஆம் ஆண்டில், வீர் சந்திர மாணிக்கியா அரியணையில் ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியான அரசியல் சீர்திருத்தங்களைத் தொடங்கினார். அவரது அரசாங்கத்தை பிரித்தானிய அமைப்பில் மாதிரியாகக் கொண்டார். வங்காளத்தின் கலாச்சாரத்தை தனது ஆட்சியின் கீழ் அரசவையில் ஏற்றுக்கொண்டார். மேலும், அவர் புகழ்பெற்ற கவிஞர் இரவீந்திரநாத் தாகூருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தில் திரிபுரா சிலகாலம் இணைக்கப்பட்ட பிறகு, கடைசி மாணிக்ய மன்னரான மகாராஜா வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் 1947 இல் இந்திய ஒன்றியத்தின் கீழ் இணையத் தேர்வு செய்தார். நவீன இந்திய தேசத்தில் திரிபுராவின் இறுதி ஏற்றம் இவரது விதவையான காஞ்சன் பிரவா தேவியால் கையெழுத்திடப்பட்டது. அவருக்குப் பதிலாக சிறுவயது கிரிட் விக்ரம் கிசோர், ஐந்து நூற்றாண்டுகளின் மாணிக்கியா ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். [7]

ஆட்சியாளர்களின் பட்டியல்

தொகு
மாணிக்கிய வம்சத்து ஆட்சியாளர்கள் (அண்.1400 – 1949)[8]
Name ஆட்சி ஆரம்பம் ஆட்சி முடிவு பதவிப் பெயர் குறிப்பு|- மகா மாணிக்கியா அண்.1400 1431
முதலாம் தர்ம மாணிக்கியா 1431 1462 மகா மாணிக்கியாவின் மகன்
முதலாம் ரத்ன மாணிக்கியா 1462 அண்.1487 முதலாம் தர்ம மாணிக்கியாவின் மகன்
பிரதாப் மாணிக்கியா அண்.1487 அண்.1487 முதலாம் ரத்ன மாணிக்கியாவின் மகன்
முதலாம் விசய மாணிக்கியா 1488 1488 பிரதாப் மாணிக்கியாவின் மகனாக இருக்கலாம்
முகுத் மாணிக்கியா 1489 1489 முதலாம் ரத்ன மாணிக்கியாவின் மகன்
தான்ய மாணிக்கியா 1490 1515 முதலாம் ரத்ன மாணிக்கியாவின் மகன்
துவஜ மாணிக்கியா 1515 1520 தான்ய மாணிக்கியாவின் மகன்
தேவ மாணிக்கியா 1520 1530 தான்ய மாணிக்கியாவின் மகன்
முதலாம் இந்திர மாணிக்கியா 1530 1532 தேவ மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் விசய மாணிக்கியா 1532 1563 தேவ மாணிக்கியாவின் மகன்
அனந்த மாணிக்கியா 1563 1567 இரண்டாம் விசய மாணிக்கியாவின் மகன்
முதலாம் உதய் மாணிக்கியா 1567 1573 அனந்த மாணிக்கியாவின் மாமனார் தனது முன்னோடியின் மரணத்தைத் தொடர்ந்து அரியணையைக் கைப்பற்றினார். சிலகாம் ஆளும் வம்சத்தை தனது சொந்த வம்சமாக மாற்றினார்.[9]
முதலாம் ஜாய் மாணிக்கியா 1573 1577 முதலாம் உதய் மாணிக்கியாவின் மகன்
அமர் மாணிக்கியா 1577 1586 தேவ மாணிக்கியாவின் மகன் தனக்கு முன் ஆட்சி செய்தவரைக் கொன்ற பிறகு மாணிக்கிய வம்சத்தை மீட்டெடுத்தார்.[10]
முதலாம் இராசதர் மாணிக்கியா 1586 1600 அமர் மாணிக்கியாவின் மகன்
ஈசுவர் மாணிக்கியா 1600 1600 அமர் மாணிக்கியாவின் மகன் அல்லது முதலாம் இராசதர் மாணிக்கியாவின் மகன்
யசோதர் மாணிக்கியா 1600 1618 முதலாம் இராசதர் மாணிக்கியாவின் மகன் முகலாயர்களால் முடியாட்சி தற்காலிகமாக அகற்றப்பப்பட்டது.[11]
கல்யாண் மாணிக்கியா 1626 1660 மகா மாணிக்கியாவின் வழித்தோன்றல் From a cadet branch of the dynasty.[12] Elected as monarch after Mughal interregnum.[13]
கோவிந்த மாணிக்கியா 1660 1661 கல்யாண் மாணிக்கியாவின் மகன் முதல் ஆட்சிக்காலம்
சத்திர மாணிக்கியா 1661 1667 கல்யாண் மாணிக்கியாவின் மகன்
கோவிந்த மாணிக்கியா 1667 1676 கல்யாண் மாணிக்கியாவின் மகன் இரண்டாம் ஆட்சிக் காலம்
இராம மாணிக்கியா 1676 1685 கோவிந்த மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் இரத்தின மாணிக்கியா 1685[14] 1693[14] ராம மாணிக்கியாவின் மகன் முதல் ஆட்சிக் காலம்
நரேந்திர மாணிக்கியா 1693[14] 1695[14] கோவிந்த மாணிக்கியாவின் பேரன்
இரண்டாம் இரத்தின மாணிக்கியா 1695[14] 1712[14] இராம மாணிக்கியாவின் மகன் இரண்டாம் ஆட்சிக் காலம்
மகேந்திர மாணிக்கியா 1712[15] 1714[15] ராம மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் தர்ம மாணிக்கியா 1714[15] 1725[15] ராம மாணிக்கியாவின் மகன் முதல் ஆட்சிக் காலம்
ஜெகத் மாணிக்கியா 1725[16] 1729[16] சத்திர மாணிக்கியாவின் பெரிய பேரன்
இரண்டாம் தர்ம மாணிக்கியா 1729[16] 1729[16] ராம மாணிக்கியாவின் மகன் இரண்டாம் ஆட்சிக் காலம்
முகுந்த மாணிக்கியா 1729 1739 இராம மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் ஜாய் மாணிக்கியா 1739 1744 கல்யாண் மாணிக்கியாவின் பெரிய பேரன் முதல் ஆட்சிக் காலம்
இரண்டாம் இந்திர மாணிக்கியா 1744 1746 முகுந்த மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் உதய் மாணிக்கியா அண். 1744 அண். 1744 இரண்டாம் தர்ம மாணிக்கியாவின் மகன் தனது உறவினர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போது சிலகாலம் அரியணைக்கு உரிமை கோரினார்.[17]
இரண்டாம் ஜாய் மாணிக்கியா 1746 1746 கல்யாண் மாணிக்கியாவின் மூன்றாம் தலைமுறை பேரன் இரண்டாம் ஆட்சிக் காலம்
மூன்றாம் விசய மாணிக்கியா 1746 1748 இரண்டாம் ஜாய் மாணிக்கியாவின் சகோதரன்
இலட்சுமண் மாணிக்கியா ? ? இரண்டாம் தர்ம மாணிக்கியாவின் பேரன் மூன்று ஆண்டுகள் சம்சேர் காசியின் கீழ் ஒரு பொம்மை-மன்னராக ஆட்சி செய்தார்.[18]
கிருஷ்ண மாணிக்கியா 1760 1783 முகுந்த மாணிக்கியாவின் மகன்
இரண்டாம் இராசதர் மாணிக்கியா 1785 1806 முகுந்த மாணிக்கியாவின் பேரன்
ராம கங்கா மாணிக்கியா 1806 1809 இரண்டாம் இராசதர் மாணிக்கியாவின் மகன் முதலாம் ஆட்சிக் காலம்
துர்கா மாணிக்கியா 1809 1813 லட்சுமண் மாணிக்கியாவின் மகன்
ராம கங்கா மாணிக்கியா 1813 1826 இரண்டாம் இராசதர் மாணிக்கியாவின் மகன் இரண்டாம் ஆட்சிக் காலம்
காசி சந்திர மாணிக்கியா 1826 1829 இரண்டாம் இராசதரின் மகன்
கிருஷ்ண கிசோர் மாணிக்கியா 1829 1849 ராம கங்கா மாணிக்கியாவின் மகன்
இசான் சந்திர மாணிக்கியா 1849 1862 கிருஷ்ண கிசோர் மாணிக்கியாவின் மகன்
வீர் சந்திர மாணிக்கியா 1862 1896 கிருஷ்ண கிசோர் மாணிக்கியாவின் மகன்
ராதா கிசோர் மாணிக்கியா 1896 1909 வீர் சந்திர மாணிக்கியாவின் மகன்
வீரேந்திர கிசோர் மாணிக்கியா 1909 1923 ராதா கிசோர் மாணிக்கியாவின் மகன்
வீர் விக்ரம் மாணிக்கியா 1923 1947 வீரேந்திர கிசோர் மாணிக்கியாவின் மகன்
கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன் 1947 1949 வீர் விக்ரம் மாணிக்கியாவின் மகன்
Titular (1949 – 1971)
கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கியா 1949 1971 (பதவி ஒழிக்கப்பட்டது) வீர் விக்ரம் கிசோர் மாணிக்கியாவின் மகன்

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்ய_வம்சம்&oldid=3802083" இலிருந்து மீள்விக்கப்பட்டது