முதலாம் தர்ம மாணிக்கியா

திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்

முதலாம் தர்ம மாணிக்கியா (Dharma Manikya I) 1431 முதல் 1462 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்ய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். தங்கர் ஃபா என்றும் அழைக்கப்படும் இவரது ஆட்சி அதன் பிராந்திய விரிவாக்கங்களுக்காகவும் இவரது மத மற்றும் கலாச்சார பங்களிப்புகளுக்காகவும் குறிப்பிடத்தக்கது.

முதலாம் தர்ம மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1431–1462
முன்னையவர்மகா மாணிக்கியா
பின்னையவர்முதலாம் ரத்ன மாணிக்கியா
Consortநானுவா[1]
குழந்தைகளின்
பெயர்கள்
ராஜா ஃபா[2]
Agar Fa[2]
முதலாம் ரத்ன மாணிக்யா
மேலும் பதைனைந்து மகன்கள்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைமகா மாணிக்கியா
மதம்இந்து சமயம்

அரியணை ஏறுதல் தொகு

இவரது தந்தையான மகா மாணிக்கியாவின் ஐந்து மகன்களில் மூத்தவரான தர்மர் ஆரம்பத்தில் அரியணையை பெற விரும்பவில்லை. அரசவை வரலாறுகளின்படி, இவர் முதலில் ஒரு துறவற வாழ்க்கையை முடிவு செய்தார். பொருளாசைகளை விட்டுவிட்டு, புனித யாத்திரைகளைத் தொடங்கினார். [3] இவர் 1431 இல் புனித நகரமான வாரணாசிக்குச் சென்றிருந்தபோது, இவரது தந்தையின் மரணம் பற்றிய செய்தியும், காலியான சிம்மாசனத்திற்கான இவரது சகோதரர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களிடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டம் பற்றிய செய்தியும் இவருக்குக் கிடைத்தது. எட்டு பிராமணர்களுடன் தர்மா திரிபுராவுக்குத் திரும்பினார் என்று ராஜ்மாலா கூறுகிறது. அங்கு இவர் மக்களால் வரவேற்கப்பட்டு அடுத்த ஆட்சியராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். [4]

ஆட்சி தொகு

இவரது ஆட்சியின் ஆரம்பத்தில், இவரது பிரதேசங்கள் வங்காள சுல்தான் சம்சுதீன் அகமது ஷாவால் படையெடுக்கப்பட்டன. இவர் பணம் மற்றும் யானைகளைக் காணிக்கையாக செலுத்தினார். இதையொட்டி, தர்மா தனது சொந்த தாக்குதலைத் தொடங்கினார். சோனார்கான் நகரத்தை ஆக்கிரமித்து கொள்ளையடித்தார்.[5][4] மேலும் வங்காள நிலங்கள் இவரது படைகளால் தாக்கப்பட்டன, பத்ரிகாரா, கங்கமண்டலம், மெகர்குல் மற்றும் கண்டல் அனைத்தும் திரிபுராவுடன் இணைக்கப்பட்டன. [6] இந்த நேரத்தில், அரக்கானின் நாடு கடத்தப்பட்ட ஆட்சியாளரான மின் சா மோன், அரசவைக்கு வருகை தந்தார். தர்மா அவரது ராச்சியத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பங்களித்தார். [7]

பாரம்பரியங்கள் தர்மாவை ஒரு சக்திவாய்ந்த நிர்வாகியாகவும், கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் புரவலராகவும் விவரிக்கின்றன; மாணிக்கிய வம்சத்தின் வரலாற்றான ராஜ்மாலாவில் இவரைப் பற்றிய தகவல் மிகவும் தெளிவாக உள்ளது. பிராமணர்களுக்கு பெருமளவிலான நிலங்களை நன்கொடையாக அளித்ததன் மூலமும், கோயில்கள் மற்றும் கொமிலாவில் உள்ள புகழ்பெற்ற தர்மசாகர் என்கிற குளம் உள்ளிட்ட இவரது கட்டுமானத் திட்டங்களின் மூலமும் இவரது மத ஆர்வமும் குறிப்பிடத்தக்கது.[8][9]

ஆட்சி பறிபோவதும், இறப்பும் தொகு

ராஜ்மாலாவில் "தங்கர் ஃபா" என்று குறிப்பிடப்படும் திரிபுரா ஆட்சியாளரை தர்ம மாணிக்கியாவை ஒத்ததாக நாணயவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. தங்கர் ஃபாவின் மகன் மற்றும் வாரிசு என்று கூறப்படும், ரத்ன மாணிக்கியாவின் (உரையில் இவரது தாத்தா என்று தவறாக அடையாளம் காணப்பட்டவர்)[10] பெயரைக் கொண்ட நாணயங்கள் இதற்குக் காரணம். உண்மையில் ரத்ன மாணிக்கியாவின் தந்தை தர்ம மாணிக்கியா என்றும், அதற்குப் பதிலாக ராஜ்மாலாவில் "தங்கர் ஃபா" உடன் இணைக்கப்பட்ட அத்தியாயங்கள் இவருடன் தொடர்புடையவை என்றும் இது அறிவுறுத்துகிறது.[8][11]

இவ்வாறு, வரலாற்றில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளின்படி, இவர் தனது ராச்சியத்தை பதினேழு பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொன்றும் தனது பதினெட்டு மகன்களில் இளையவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பகிரப்பட்டது.Sarma} ஒதுக்கப்பட்ட மகன் ரத்னா, வங்காள சுல்தான் ருகுனுதீன் பர்பக் ஷாவிடம் பணயக்கைதியாக கொடுக்கப்பட்டார். இருப்பினும், ரத்னா சுல்தானுடன் கூட்டணி வைத்து திரிபுரா மீது படையெடுப்பு நடத்தி, தனது தந்தை மற்றும் சகோதரர்களை தோற்கடித்தார்.[12] இவரது மற்ற மகன்கள் சிறையில் இருந்தபோது, புதிய மன்னரால் ராச்சியத்திலிருந்து தர்மா வெளியேற்றப்பட்டார். நாடுகடத்தப்பட்டு இவர் இறுதியில் திரிபுராவின் கிழக்கே தனஞ்சி மலையில் இறந்தார்.[13][14][15]

சான்றுகள் தொகு

  1. Ray (1976), ப. 6.
  2. 2.0 2.1 Bhattacharyya (1986), ப. 16.
  3. Sarma (1987), ப. 39.
  4. 4.0 4.1 Sarma (1987), ப. 40.
  5. Singh (1980), ப. 42.
  6. Ghoshal (2018), ப. 333.
  7. Goswami (1996), ப. 20.
  8. 8.0 8.1 Gan-Chaudhuri (1980), ப. 20.
  9. Chib (1988), ப. 7.
  10. Sur (1986), ப. 220.
  11. Saha (1986), ப. 168.
  12. Sarma (1987), ப. 44.
  13. Sarma (1987), ப. 48.
  14. Sarma (1987), ப. 53.
  15. Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 60.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_தர்ம_மாணிக்கியா&oldid=3801212" இலிருந்து மீள்விக்கப்பட்டது