முகுந்த மாணிக்கியா

திரிபுரா ராச்சியத்தின் அரசன்

முகுந்த மாணிக்கியா (Mukunda Manikya) (இ. 1739) 1729 முதல் 1739 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.

முகுந்த மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் மன்னன்
ஆட்சிக்காலம்1729–1739
முன்னையவர்இரண்டாம் தர்ம மாணிக்கியா
பின்னையவர்இரண்டாம் ஜாய் மாணிக்கியா
பிறப்புசந்தரமணி தாக்கூர்
இறப்பு1739
மனைவிகள்[1]
  • பிரபாவதி
  • ருக்ஸ்மணி
வாரிசுகள்[1]
பெயர்கள்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைராம மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வரலாறு தொகு

முதலில் சந்திரமணி தாக்கூர் என்று பெயரிடப்பட்ட இவர், மகாராஜா ராம மாணிக்கியாவின் எஞ்சியிருக்கும் நான்கு மகன்களில் இளையவர். [2] இவரது மூத்த சகோதரர்கள் ஒவ்வொருவரும் திரிபுராவை அடுத்தடுத்து ஆண்டனர். முதலாம் ரத்ன மாணிக்கியாவின் ஆட்சியின் கீழ், சந்திரமணி முர்சிதாபாத் முகலாயர் துணை நீதிமன்றத்திற்கு பணயக்கைதியாக அனுப்பப்பட்டார். அதே நேரத்தில் மகேந்திர மாணிக்கியா மற்றும் இரண்டாம் தர்ம மாணிக்கியா ஆகியோரின் ஆட்சியின் போது, இவர் முறையே பரதாக்கூர் மற்றும் யுவராஜ் என நியமிக்கப்பட்டார்.[3] பரதாக்கூர் என்பது சமீபத்தில் உருவாக்கப்பட்ட பதவியாகும், இதன் பொருள் "முதன்மை இளவரசர்" என்பதாகும்.[4]

ஆட்சி தொகு

தர்ம மாணிக்கியாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவர் 1729 இல் முகுந்த மாணிக்கியா என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். [5] பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் நிலங்களை தானமாக அளித்து, பக்திமிக்க மன்னராக தன்னை நிரூபித்தார். [6] இவர் முகலாயர்களுடன் நல்லுறவைப் பேண முயன்றார். தனது மகன் பஞ்ச கௌரி தாக்கூர் என்கிற இரண்டாம் இந்திர மாணிக்கியாவை பிணைக் கைதியாக அனுப்பினார்.[7] மேலும் உதய்ப்பூரில் உள்ள முகலாய பௌஜ்தாரைக் கொல்லும் சதித்திட்டத்தை இவரது உறவினர் ருத்ரமணி என்கிற இரண்டாம் ஜாய் மாணிக்கியா மூலம் நிறைவேற்றினார்.[8]

இருப்பினும், 1739 ஆம் ஆண்டில், திரிபுராவின் ஐந்து யானைகள் வழங்கும் வருடாந்திர கப்பத்தை வழங்கத் தவறியதால், இவர் முகலாயர்களால் தூக்கியெறியப்பட்டார். உதய்ப்பூர் முற்றுகையிடப்பட்டு, இவரும், இவரது மகன்கள் பத்ரமணி, கிருஷ்ணமணி மற்றும் மருமகன் கங்காதர் என்கிற இரண்டாம் உதய் மாணிக்யா ஆகியோருடன் கைது செய்யப்பட்டனர். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது ராணி உடன்கட்டை ஏறினார். இவருக்குப் பிறகு ருத்ரமணி (பின்னர் இரண்டாம் ஜாய் மாணிக்கியா) முகலாயர்களை உதய்ப்பூரிலிருந்து விரட்டியடித்தார்.[9]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Sarma, Ramani Mohan (1987). Political History of Tripura. Calcutta: Puthipatra. பக். 128. https://books.google.com/books?id=bmpuAAAAMAAJ. 
  2. (Sarma 1987)
  3. (Sarma 1987, ப. 119, 120, 125)
  4. Saha, Sudhanshu Bikash (1986). Tribes of Tripura: A Historical Survey. Agartala: Rupali Book House. பக். 63. https://books.google.com/books?id=ioMiAAAAMAAJ. 
  5. Gan-Chaudhuri, Jagadis (1980). Tripura, the land and its people. Leeladevi. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788121004480. https://books.google.com/books?id=SFFuAAAAMAAJ. 
  6. DebBarma, Chandramani (2006). Glory of Tripura civilization: history of Tripura with Kok Borok names of the kings. Parul Prakashani. பக். 25. https://books.google.com/books?id=wU9uAAAAMAAJ. 
  7. Sur, Hirendra Kumar (1986). British Relations with the State of Tripura, 1760-1947. Saraswati Book Depot. பக். 13. https://books.google.com/books?id=XSouAAAAMAAJ. 
  8. (Sarma 1987, ப. 127)
  9. (Sarma 1987)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த_மாணிக்கியா&oldid=3801486" இலிருந்து மீள்விக்கப்பட்டது