முர்சிதாபாத்
முர்சிதாபாத் (Murshidabad) (Pron: ˈmʊəʃɪdəˌbɑ:d/bæd or ˈmɜ:ʃɪdəˌ) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் கொல்கத்தாவிற்கு வடக்கே 238 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
முர்சிதாபாத்
Murshidabad | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°11′N 88°16′E / 24.18°N 88.27°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | முர்சிதாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | முர்சிதாபாத் நகராட்சி மன்றம |
ஏற்றம் | 10 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 44,019 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம் |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 742149 |
தொலைபேசி குறியீடு | 91-3482-2xxxxx |
வாகனப் பதிவு | WB-58 |
மக்களவைத் தொகுதி | முர்சிதாபாத் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | முர்சிதாபாத் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | murshidabad |
வங்காள நவாப்புகளின் தலைநகமாக இருந்த முர்சிதாபாத் நகரம், 1757-இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் ஆங்கிலேயர்கள், நவாப் சிராச் உத் தவ்லாவிடமிருந்து முர்சிதாபாத் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகரத்தை கொல்கத்தாவில் நிறுவியதால், முர்சிதாபாத் நகரம் தனது செல்வாக்கை இழந்தது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 வார்டுகளும், 9,829 வீடுகளும் கொண்ட முர்சிதாபாத் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 44,019 ஆகும். அதில் 21,842 ஆண்கள் மற்றும் 21,842 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4414 (10.03%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.94% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 75.09%, முஸ்லீம்கள் 23.86%, மற்றும் பிறர் 1.05% ஆகவுள்ளனர்.[1]
தொடருந்து நிலையம்
தொகு4 நடைமேடைகளைக் கொண்ட முர்சிதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தாவின் புறநகரில் உள்ள சியால்தா தொடருந்து நிலையத்திற்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- District website
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Murshidabad