ஊக்லி ஆறு
(ஹுக்ளி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊக்லி ஆறு அல்லது பாகிரதி-ஊக்லி என்பது ஏறத்தாழ 260 கிமீ நீளமுள்ள கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இந்த ஆறு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது; அம்மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள ஃபராக்கா பராசு (Farakka Barrage) என்னும் இடத்தில் கங்கையில் இருந்து பிரிகிறது. முன்னர் ஊக்லி என்று அழைக்கப்பட்ட, ஊக்லி-சின்சுரா நகரம் இந்த ஆற்றங்கரையிலேயே உள்ளது. ஊக்லி என்னும் பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தெளிவில்லை. நகரத்தின் பெயரிலிருந்து ஆற்றின் பெயர் வந்ததா அல்லது ஆற்றின் பெயரைத் தழுவி நகரத்துக்குப் பெயர் சூட்டப்பட்டதா என்பது தெரியவில்லை.