இராம மாணிக்கியா

திரிபுரா ராச்சியத்தின் ஆட்சியாளர்
(ராம மாணிக்கியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராம மாணிக்கியா (Rama Manikya) (இ. 1676), இராம் மாணிக்கியா அல்லது இராம்தேவ் மாணிக்கியா என்றும் அழைக்கப்படும் இவர், 1676 முதல் 1685 வரைதிரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.

இராம மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1676–1685
முன்னையவர்கோவிந்த மாணிக்கியா
பின்னையவர்இரண்டாம் இரத்தின மாணிக்கியா
இறப்பு1685
பட்டத்தரசிரத்னாவதி
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைகோவிந்த மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வரலாறு தொகு

மகாராஜா கோவிந்த மாணிக்கியாவின் மூத்த மகனான, இவர் தனது தந்தையின் இராணுவத் தளபதிகளில் ஒருவராகவும் செயல்பட்டார். டிசம்பர் 1661 இல், இவர் கலகம் செய்த தனது மாமா நட்சத்ர ரே என்கிற சத்ர மாணிக்கியாவுக்கு எதிராக அனுப்பப்பட்டார். அம்தாலி போரில் அவரை எதிர் கொண்டார். இந்தப் போரில் இராமன் தோற்கடிக்கப்பட்டார். இந்த இழப்பு இவரது தந்தைக்கு தற்காலிகமாக சில ஆண்டுகள் திரிபுராவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [1]

1676 இல் கோவிந்தரின் மரணத்தைத் தொடர்ந்து, இராமன் அரியணை ஏறினார். இருப்பினும் இவர் விரைவில் தனது மருமகன் துவாரிகா தாக்கூரிடமிருந்து கிளர்ச்சியை எதிர்கொண்டார். பிந்தையவர் நரேந்திர மாணிக்கியா என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், சரயிலைச் சேர்ந்த ஆப்கானிய நவாப் நசீர் முகம்மதுவின் உதவியுடன் ராமரை வீழ்த்தினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னர் வங்காளத்தின் முகலாய ஆளுநரான சயிஸ்ட கானிடம் உதவிக்காகச் சென்றார். கான் இவருக்கு ஆதரவாக தனது இராணுவத்தை அனுப்பி இவர் அரியணையை மீண்டும் கைப்பற்ற உதவினார். கான் நரேந்திரனை டாக்காவிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றார். [2] [3]

ஒரு கட்டத்தில், இராமன் வடக்கே சில்ஹெட் நோக்கி ஊடுருவி நகர எல்லை வரை சென்றடைந்தார். திரிபுராவில், இவர் விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடு, பல குளங்கள் மற்றும் கோவில்களை எழுப்பினார். விஷ்ணுவின் நினைவாக ( வைணவத்துடனான தனிப்பட்ட உறவைப் பரிந்துரைக்கிறது)[note 1] அத்துடன் மின்னல் தாக்குதலால் முன்பு சேதமடைந்த திரிபுர சுந்தரி கோவிலை பழுதுபார்ப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டார். இன்றைய திரிபுரா மற்றும் வங்காளதேசம் முழுவதும் அமைந்துள்ள பல கிராமங்கள் இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன. [5]

இறப்பு தொகு

ராமர் 1685 இல் முதுமையில் இறந்தார். இவரது மனைவி இரத்னாவதி இவரது இறுதிச் சடங்கில் உடன்கட்டை ஏறினார்.[6] இவருக்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் இரத்தின மாணிக்கியா பதவிக்கு வந்தார்.

குறிப்புகள் தொகு

  1. இவரது நாணயத்தில் சிவனைக் குறிப்பிடுவதன் மூலம் சைவ சமயத்தின் ஆதரவையும் குறிக்கிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Goswami, D.N.. The Episode of Shuja Mosque- A historical review. 
  2. Dutta, Sushil Chandra (1984). The North-east and the Mughals (1661-1714). Delhi: D.K. Publications. பக். 145. https://archive.org/details/in.ernet.dli.2015.117972. 
  3. Thakurta, S. N. Guha (1999). Tripura. National Book Trust, India. பக். 13. https://books.google.com/books?id=8LFuAAAAMAAJ. 
  4. Sarma, Raman Mohan (1987). Political History of Tripura. Puthipatra. பக். 115. https://books.google.com/books?id=bmpuAAAAMAAJ. 
  5. (Sarma 1987)
  6. (Sarma 1987)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம_மாணிக்கியா&oldid=3802074" இலிருந்து மீள்விக்கப்பட்டது