சத்திர மாணிக்கியா
சத்திர மாணிக்கியா (Chhatra Manikya) (இ. 1667) 1661 முதல் 1667 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.
நட்சத்திர ராய் என்ற பெயரில் பிறந்த இவர் மகாராஜா கல்யாண் மாணிக்கியாவின் இளைய மகனாவார். 1658 இல் முகலாய இளவரசர் ஷா ஷுஜாவால் தொடுக்கப்பட்ட போரில் இவரது தந்தையின் தோல்வியைத் தொடர்ந்து, இவர் முகலாய நீதிமன்றத்திற்கு பணயக்கைதியாக அனுப்பப்பட்டார். அங்கு இருந்தபோது, இவரது நடத்தை முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆதரவைப் பெற்றது.
இவரது தந்தையின் மரணத்திகுப் பிறகு இவரது சகோதரர் கோவிந்த மாணிக்கியா பதவியேற்ற பிறகு, இவர் 1661 இல் அரியணைக்கு முயற்சித்தார். பேரரசரின் ஆதரவுடனும், வங்காளத்தின் முகலாய ஆளுநரின் இராணுவ ஆதரவுடனும், ஒரு தாக்குதல் தொடங்கப்பட்டது. முதல் தாக்குதலில் தலைநகர் உதய்ப்பூர் கைப்பற்றப்பட்டது. கோவிந்தா ராச்சியத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . பின்னர், இவர் சத்திர மாணிக்கியா என்ற பெயரில் அரியணை ஏறினார். [1]
ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, இவரது சகோதரர் அண்டை நாடான அரக்கானின் ஆட்சியாளரின் உதவியைப் பயன்படுத்தி மீண்டும் அரியணையை கைப்பற்றினார். இந்த கட்டத்தில் சத்திரா கோவிந்தனால் கொல்லப்பட்டாரா அல்லது தாக்குதலுக்கு முன்பே இறந்துவிட்டாரா என்பது நிச்சயமற்றது. [2]