ஜெகத் மாணிக்கியா

திரிபுராவின் மன்னன்

ஜெகத் மாணிக்கியா (Jagat Manikya) (ஆட்சிக்கு முந்தைய பெயர் ஜோகோத்ராய்) 1732 முதல் அதுவரை திரிபுரா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த ரோஷ்னாபாத்தின் வங்காள ஆதரவு ஆட்சியாளராக இருந்தார்.

ஜெகத் மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்1725–1729
முன்னையவர்இரண்டாம் தர்ம மாணிக்கியா
பின்னையவர்இரண்டாம் தர்ம மாணிக்கியா
இறப்பு1729
வாரிசு[1]
பெயர்கள்
  • பலராம் மாணிக்கியா
  • ராமச்சந்திரன்
மரபுமாணிக்ய வம்சம்
தந்தைவிசய நாராயணன் ( சத்ர மாணிக்கியாவின் பேரன்)[1]
மதம்இந்து சமயம்

அந்த ஆண்டில் ஜோகோத்ராய் தனது உறவினரான இரண்டாம் தர்ம மாணிக்கியாவிற்கு பதிலாக ஆட்சியாளராக விரும்பினார். இவர் வங்காளத்திற்குச் சென்று, வங்காளத்தின் நவாப் ஷுஜா-உத்-தின் முகம்மது கானின் உதவியுடன் உதய்ப்பூர் மீதான தாக்குதலைத் தொடர்ந்ந்தார். போரில், தர்ம மாணிக்கியாவின் படைகளின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். தர்ம மாணிக்கியாவும் அவரது ஆதரவாளர்களும் திரிபுராவின் மலைப் பகுதிகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். ஜோகோத்ராய் பின்னர் ஜெகத் மாணிக்கியா என்ற ஆட்சிப் பெயரை ஏற்றுக்கொண்டார். மேலும் நவீன சில்ஹெட் மற்றும் மைமன்சிங்கின் பெரும்பகுதியை வங்காள நவாப்பின் அடிமையாக ரோஷ்னாபாத்திலிருந்து ஆட்சி செய்தார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Choudhury, Achyut Charan (2000) [1910], Srihatter Itibritta: Purbangsho (in Bengali), Kolkata: Kotha, p. 502

ஆதாரங்கள் தொகு

  • Bidhas Kanti Kilikhar. Tripura of the Eighteenth Century with Samsher Gazi Against Feudalism: A Historical Study. Chhapakuthi, Agartula: Tripura State Tribal Cultural Research Institute and Museum, 1995.

இதனையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்_மாணிக்கியா&oldid=3801517" இலிருந்து மீள்விக்கப்பட்டது