இரண்டாம் உதய் மாணிக்கியா

திரிபுராவின் ஆட்சியாளார்

இரண்டாம் உதய் மாணிக்யா (Udai Manikya II) 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிலகாலம் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். இவரது உறவினர்களான இரண்டாம் ஜாய் மாணிக்கியா மற்றும் இரண்டாம் இந்திர மாணிக்கியா ஆகியோரிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டபோது இவர் அரியணைக்கு உரிமை கோரினார்.

இரண்டாம் உதய் மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் மன்னன்
ஆட்சிக்காலம்அண். 1744
முன்னையவர்இரண்டாம் ஜாய் மாணிக்கியா
பின்னையவர்இரண்டாம் ஜாய் மாணிக்கியா
பிறப்புகங்காதர் தாக்கூர்
இறப்புடாக்கா, வங்காள சுபா
மரபுமாணிக்ய வம்சம்
தந்தைஇரண்டாம் தர்ம மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வாழ்க்கை தொகு

முதலில் கங்காதர் தாக்கூர் என்று பெயரிடப்பட்ட இவர், இரண்டாம் தர்ம மாணிக்கியாவின் மூத்த மகனவார். தர்மாவின் ஆட்சியின் போது, கங்காதர் மற்றும் இவரது இளைய சகோதரர் கதாதர் தாக்கூர் இருவரும் யுவராஜ் (பட்டத்து இளவரசர்) என்று பெயரிடப்பட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில்ஒரு சண்டையின் காரணமாக, பட்டம் இவர்களின் மாமா சந்திரமணியிடம் சென்றது. பின்னர் அவர் முகுந்த மாணிக்கியா என்ற பெயரில் அரியணை ஏறினார்.[1]

1744 வாக்கில், இரண்டாம் ஜாய் மாணிக்யா மற்றும் இரண்டாம் இந்திர மாணிக்கியா இடையேயான அதிகாரப் போட்டியின் காரணமாக திரிபுரா மோதலில் இருந்தது. சூழ்நிலையைப் பயன்படுத்தி, கங்காதர், டாக்காவின் முகலாய நயீப் நாஜிம், நவாஜிஷ் முகம்மது கானுக்கு லஞ்சம் கொடுத்து, அவருக்கு ஆதரவாக பத்வாவைப் பெற்றார்.[2][3] முகம்மது ராஃபி என்ற தளபதியின் தலைமையில் பலமான படையுடன் கொமிலாவுக்கு வந்த இவர், உதய் மாணிக்கியா என்ற பெயருடன் அரியணையைக் கைப்பற்றினார்.[3] இருப்பினும் இவரது ஆட்சி குறுகியதாக இருந்தது. [4] இவரது படையெடுப்பிற்கு எதிராக ஜாயின் இராணுவம் வலுவான எதிர்ப்பைக் கொடுத்தது. இவரை அடிபணியச் செய்து இவரை வெளியேற்றியது.[3] உதய் டாக்காவில் இறந்தார்.[2]

சான்றுகள் தொகு

  1. Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999). Sri Rajmala. Agartala: Tribal Research Institute, Govt. of Tripura. பக். 176. https://books.google.com/books?id=cD9uAAAAMAAJ. 
  2. 2.0 2.1 Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D.. Sterling. பக். 34. https://books.google.com/books?id=WoJ5AAAAIAAJ. 
  3. 3.0 3.1 3.2 (Sarma 1987, ப. 130)
  4. Somerset Playne; J.W, Bond (1917). Arnold Wright. ed. Bengal and Assam, Behar and Orissa: Their History, People, Commerce, and Industrial Resources. London: Foreign and Colonial Compiling and Publishing Company. பக். 469. https://archive.org/details/bengalassambehar00playuoft/page/469/mode/1up.